அபிநந்தனை பார்த்து அப்படியே 'ஷாக்' ஆன அமெரிக்கா: சொல்கிறார் நடிகை
நியூயார்க்: அபிநந்தனின் திறமையை பார்த்து அமெரிக்கா அதிர்ந்து போயுள்ளதாக பாலிவுட் நடிகை ப்ரீத்தி ஜிந்தா தெரிவித்துள்ளார்.
இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் வர்த்தமான் சென்ற மிக்- 21 பைஸன் விமானத்தை பாகிஸ்தான் சுட்டு வீழ்த்துவதற்கு முன்பு அவர்களின் எஃப் 16 விமானத்தை அவர் சுட்டு வீழ்த்தினார்.
அவரின் திறமையை பார்த்து அமெரிக்கா வியப்பதாக பாலிவுட் நடிகை ப்ரீத்தி ஜிந்தா ட்வீட் செய்துள்ளார்.
அதிர்ச்சி
65 ஆண்டுகள் பழமையான ரஷ்ய விமானமான மிக்-21 அமெரிக்காவில் தயாரித்து விற்பனை செய்யப்பட்ட எஃப்16ஐ வீழ்த்திவிட்டதா என்று அமெரிக்க மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர். இதன் மூலம் விமானியின் பயிற்சி பற்றி தெரிகிறது. சிறந்த விமானி இருக்கும் விமானமே சிறந்த விமானம் என்று ட்வீட் செய்துள்ளார் ப்ரீத்தி.
அபிநந்தன்
ப்ரீத்தியின் ட்வீட்டை பார்த்த பாகிஸ்தானியர்கள் நக்கலாக கமெண்ட் போட்டுள்ளனர்.
ப்ரீத்தி
நள்ளிரவாகிவிட்டது ஆனால் என்னால் தூங்க முடியவில்லை. அபிநந்தன் நாடு திரும்புகிறார் என்பதில் மகிழ்ச்சியாக உள்ளது. அவரது குடும்பம் எப்படி உணரும் என்பது புரிகிறது. உங்களின் வீரத்திற்கு வணக்கம் என்று அபிநந்தன் நாடு திரும்பும் முன்பு ட்வீட் செய்திருந்தார் ப்ரீத்தி ஜிந்தா.
கலிபோர்னியா
ப்ரீத்தியின் ட்வீட்டை பார்த்த ஒருவர் கலிபோர்னியாவில் இருக்கும் என்னாலும் தூங்க முடியவில்லை என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











