twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அந்த விஷயத்தை பற்றிப் பேச மக்கள் ரொம்ப வெட்கப்படறாங்க..இதுல என்ன இருக்கு? பிரபல நடிகை அக்கறை!

    By
    |

    சென்னை: மக்கள் அந்த விஷயத்தைப் பற்றிப் பேச வெட்கப்படுகிறார்கள் என்று பிரபல நடிகை ஸ்ருதிஹாசன் தெரிவித்துள்ளார்.

    Recommended Video

    Thalaivan Irukkiran Exclusive Cast Update | Kamal Hassan, Vijay Sethupathi, Pooja Kumar

    கொரோனா லாக்டவுன் பிறப்பிக்கப்பட்டும் அதன் தீவிரம் குறையவில்லை. தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

    இந்தியாவில் இதனால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது.

    இதுதான் குவரைன்டைன் நவரசமா? அழகழகான எக்ஸ்பிரசன்களில் ஸ்ருதிஹாசன்.. ரசித்துக் கொண்டாடும் ஃபேன்ஸ்! இதுதான் குவரைன்டைன் நவரசமா? அழகழகான எக்ஸ்பிரசன்களில் ஸ்ருதிஹாசன்.. ரசித்துக் கொண்டாடும் ஃபேன்ஸ்!

    மன ஆரோக்கியம்

    மன ஆரோக்கியம்

    இதைக் கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன. இருந்தும் இந்த வைரஸ் தீவிரமாகி வருகிறது. இந்நிலையில், கொரோனா லாக்டவுன் காரணமாக மும்பையில் வசித்து வரும் நடிகை ஸ்ருதிஹாசன், அளித்துள்ள பேட்டியில், இந்த லாக்டவுன் காரணமாக, மக்களின் மன ஆரோக்கியம் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது என்று கூறியுள்ளார்.

    வெட்கப்படுவார்கள்

    வெட்கப்படுவார்கள்

    இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது: உலகம், கொரோனா தொற்று காரணமாக, லாக்டவுனில் சிக்கி இருக்கிறது. இது இயற்கைக்கு மாறானச் சூழல். இது பல்வேறு வழிகளில் மக்களைப் பாதிக்கிறது. அதில் ஒன்று, அவர்களின் மன ஆரோக்கியம். இப்போது இதுதான் மக்களின் உண்மையான பிரச்னை என்று கருதுகிறேன். ஆனால், மக்கள் பொதுவாக எச்சரிக்கையாக இருப்பார்கள் அல்லது இந்த விஷயம் பற்றிப் பேச வெட்கப்படுகிறார்கள்.

    லாக்டவுன் காரணமாக

    லாக்டவுன் காரணமாக

    நான் மூன்று வருடங்களாக இதற்கானச் சிகிச்சையில் இருக்கிறேன். மக்களுக்கும் அதை தீவிரமாகப் பரிந்துரைக்கிறேன். என்னிடம் அந்தச் சிகிச்சைக்கான கருவிகள் இருக்கின்றன. அதோடு தியானமும் பேருதவியாக இருக்கிறது. இந்த லாக்டவுன் காரணமாக, வீட்டில் தனியாக இருப்பது கடினமாக இருக்கிறது. யாருடனும் நேரடி தொடர்பு இல்லை.

    நேரடி உரையாடல்

    நேரடி உரையாடல்

    லாக்டவுன் அறிவிக்கப்பட்டபோது நான் பிசியாக இருந்தேன். பத்திரிகை அட்டைப் படங்களுக்கான படப்பிடிப்பு இருந்தது. நீண்ட நேரமாக இசையில் மூழ்குகிறேன். பொதுவான விஷயங்கள் பற்றி எழுதுகிறேன். அதனால் இந்த நேரம் எனக்கு பயனுள்ளதாக இருக்கிறது. சமூக வலைத்தளங்களில் ரசிகர்களுடன் நேரடியாக உரையாடியதை ரசித்திருக்கிறேன்.

    பிறகான வாழ்க்கை

    பிறகான வாழ்க்கை

    ஆனால், உங்கள் முன்னால் ஒருவர் இருந்து பேசுவதற்கும் இதற்கும் வித்தியாசம் இருக்கிறது. லாக்டவுனுக்கு பிறகான வாழ்க்கை எளிதானதாக இருக்காது. மன ஆரோக்கியத்திற்கு உடல்பயிற்சி சிறந்தது என நினைக்கிறேன். அதனால், ஒர்க் அவுட், டான்ஸ் அல்லது யோகா அதற்கு உதவும். இவ்வாறு ஸ்ருதிஹாசன் தெரிவித்தார்.

    English summary
    shruti hassan says mental health crisis is a real concern and recommends therapy for ones who need it.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X