twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இழவு வீட்டிற்கு சென்ற இடத்தில் ரசிகர்களுடன் செல்ஃபி: நடிகரை விளாசிய மக்கள்

    By Siva
    |

    Recommended Video

    இழவு வீட்டிற்கு போன சுரேஷ் கோபி சிரித்து கொண்டே எடுத்த செல்ஃபீ சர்ச்சை- வீடியோ

    திருவனந்தபுரம்: கொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவர் அபிமன்யுவின் குடும்பத்தாருக்கு ஆறுதல் சொல்ல சென்ற நடிகர் சுரேஷ் கோபி செய்த காரியத்தை பார்த்து மக்கள் அவரை விளாசியுள்ளனர்.

    கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள மகாராஜா கல்லூரியில் பி.எஸ்.சி. இரண்டாம் ஆண்டு படித்து வந்த அபிமன்யு கடந்த 1ம் தேதி கொலை செய்யப்பட்டார்.

    இந்நிலையில் மலையாள நடிகரும், பாஜக ராஜ்யசபா எம்.பி.யுமான சுரேஷ் கோபி சனிக்கிழமை அபிமன்யுவின் வீட்டிற்கு சென்றுள்ளார்.

    சுரேஷ் கோபி

    சுரேஷ் கோபி

    இடுக்கி மாவட்டம் வட்டவடா பகுதியில் உள்ள அபிமன்யுவின் வீட்டிற்கு சுரேஷ் கோபியுடன் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகளும் சென்றனர். சுரேஷ் கோபி அபிமன்யுவின் குடும்பத்தாரை சந்தித்து ஆறுதல் கூறினார்.

    செல்ஃபி

    செல்ஃபி

    சுரேஷ் கோபி வரும் தகவல் அறிந்து அபிமன்யு வீடு இருக்கும் பகுதியில் ரசிகர்கள் கூடிவிட்டனர். இழவு வீட்டிற்கு வந்த இடத்தில் சுரேஷ் கோபி தனது ரசிகர்கள் மற்றும் கட்சியினருடன் சேர்ந்து சிரித்தபடி செல்ஃபி எடுத்தார்.

    மரணம்

    மரணம்

    ஒரு உயிர் போனதற்கு ஆறுதல் சொல்ல வந்த இடத்தில் இப்படியா சிரித்துக் கொண்டு செல்ஃபி எடுப்பது. உங்களுக்கு எல்லாம் மனசே இல்லையா என்று சமூக வலைதளங்களில் மக்கள் சுரேஷ் கோபியை வறுத்தெடுத்துள்ளனர்.

    வைரல்

    அபிமன்யு வீட்டிற்கு சென்ற இடத்தில் சுரேஷ் கோபி சந்தோஷமாக எடுத்த செல்ஃபிக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது. முன்னாள் எம்.எல்.ஏ. சிவன்குட்டி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் சுரேஷ் கோபியின் செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

    English summary
    People blast actor cum BJP Rajya Sabha Member (MP) Suresh Gopi for his happy selfies with fans while visited the house of Abhimanyu, a student stabbed to death last week in Kerala.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X