தமிழ்நாடு சுடுகாடா மாறிடும்.. ராஜினாமா பண்ணிடுங்க விஜய்.. மக்கள் ஆதங்கம்!

சென்னை: தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் 108 இடங்களை வென்ற தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், ஆட்சி அமைக்க உரிமை கோரி ஆளுநருக்கு கடிதம் எழுதியிருந்தார். அந்த கடிதத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க இரண்டு வார கால அவகாசம் தேவை என்று கோரிக்கை வைத்திருந்தார். ஆனால், ஆளுநர் இதுவரை ஆட்சி அமைக்க விஜய்யை அழைக்காததால் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கடும் அதிருப்தியில் இருக்கும் நிலையில் மக்கள் தங்கள் ஆதங்களை வெளிப்படுத்தி உள்ளனர்.

TVK Vijay

அதில் பேசிய பெண் ஒருவர், நான்கு நாட்களாக டிவியை பார்த்து பார்த்து ஒரே மன உளைச்சலாக இருக்கிறோம். எங்களுக்கு நல்லாட்சி கொடுக்க வேண்டும் என்பதற்காகத்தான் நீங்கள் கட்சிகளுடன் கூட்டணி சேருகிறீர்கள். ஆனால் கூட்டணி சேர்ப்பவர்கள் எப்படி இருப்பார்கள் என தெரியாது. துணை முதல்வர் பதவி வேண்டும், இன்னும் சில கோரிக்கைகளை வைத்து உங்களுக்கு தொந்தரவு கொடுத்தால், உங்களால் நல்ல ஆட்சியை கொடுக்க முடியாது. மேலும், அவர்கள் செய்யும் தவறுகள் உங்கள் தலையில் தான் விடும். இதனால் ஒட்டுமொத்தமாக அனைவரும் சேர்ந்து ராஜினாமா செய்து விடுங்கள், மீண்டும் ஆறு மாதத்தில் தேர்தல் வரும், அதில் 234 தொகுதிகளிலும் நாங்கள் உங்களை வெற்றி பெற வைக்கிறோம் என ஆதங்கத்துடன் பேசி உள்ளார்.

சுடுகாடா மாறிடும்: அதே போல கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் இருக்கும் தொழிலாளர் ஒருவர், விஜய் முதலமைச்சர் ஆக வேண்டும், அப்படி அவர் முதலமைச்சராக்காமல் பிரச்சாரனை செய்தால், விஜய்க்கு மீண்டும் வாக்கு போட்டு 234 தொகுதிகளிலும் அவரை தான் ஜெயிக்க வைப்போம் என்றார். ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் பேசுகையில்,விஜய் முதலமைச்சர் ஆகவில்லை என்றால் இந்த நாடே சுடுகாடாக மாறிவிடும். நான் பக்கா திமுககாரன் தான். இருந்தாலும் ஆறு குடியரசுத் தலைவர் ஆட்சி வந்தால், நாடு தாக்கு பிடிக்காது. இளைஞர்கள் அனைவரும் விஜயை தேர்ந்தெடுத்து வாக்களித்து இருக்கிறார்கள். அப்படி இருக்கும்போது இது கல்லூரி மாணவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி தமிழகத்திலே ஒரு அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டு விடும் என்றார். காய் விற்கும் பெண்மணி ஒருவர், விஜயை முதலமைச்சராக்காமல் நாங்கள் விடமாட்டோம். இவ்வளவு கஷ்டப்பட்டு ஓட்டு போட்டு அவரை ஜெயிக்க வைத்தது இருக்கிறோம். விஜய்யை ஆளுநர் எதற்கு அழைக்க வேண்டும்? பொதுமக்கள் நாங்களே அவரை முதலமைச்சர் ஆக்குவோம் என ஆவேசமாக பேசினார்.

Read more about: tvk விஜய்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X