twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஜெயலலிதா கைது எதிரொலி: 'மெட்ராஸை' பெங்களூரில் பார்க்கும் தமிழர்கள்!

    By Veera Kumar
    |

    பெங்களூர்: ஜெயலலிதா கைதை தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை தமிழகத்தில் நிலவுவதால், மெட்ராஸை பார்க்க பெங்களூர் வருகின்றனர், அண்டை மாவட்டங்களிலுள்ள தமிழர்கள்.

    சொத்துக்குவிப்பு வழக்கில், அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா கடந்த 27ம்தேதி பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தால் சிறை தண்டனைக்குள்ளாக்கப்பட்டார். இதையடுத்து, தமிழகத்தில் பஸ்கள் தாக்கப்பட்டன, கடைகள் மூடப்பட்டன. திரைத்துறையினர் உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.

    மெட்ராஸ், அரண்மனை

    மெட்ராஸ், அரண்மனை

    இப்படி, தமிழகத்தில் பதற்றமான சூழ்நிலை நிலவினாலும், பெங்களூரில் பிரச்சினை இல்லை. இங்கு அமைதி நிலவுகிறது. இந்நிலையில், கடந்த வாரம் வெள்ளிக்கிழமை, கார்த்தி நடித்த மெட்ராஸ் திரைப்படம் வெளியானது. அதற்கு முந்தையவாரம், சுந்தர்.சியின், அரண்மனை திரைப்படம் வெளியானது.

    தியேட்டர்களில் கூட்டம் குறைவு

    தியேட்டர்களில் கூட்டம் குறைவு

    இரண்டு படங்களும் ரசிகர்கள் வரவேற்பை பெற்றுள்ளபோதிலும், தமிழகத்தில் நிலவும் பதற்றமான சூழ்நிலையால், தியேட்டர்களில் ரசிகர்கள் கூட்டம் குறைவாக உள்ளது.

    பெங்களூரில் ரசிகர்கள்

    பெங்களூரில் ரசிகர்கள்

    எனவே, மெட்ராஸ், அரண்மனை திரைப்படங்களை பார்க்க, பெங்களூரிலுள்ள தியேட்டர்களுக்கு தமிழகத்தில் இருந்து ரசிகர்கள் வந்து குவிகின்றனர். கர்நாடக சினிமா வர்த்தகசபை நிர்வாகி மற்றும் பிரபல வினியோகஸ்தர் தாமஸ் டிசோசா, கூறுகையில், பெங்களூர் தவிர, சாம்ராஜ்நகர், கோலார் தங்கவயல் ஆகிய நகரங்களிலுள்ள தியேட்டர்களில் தமிழ் படங்களை பார்க்க ஈரோடு, வேலூர், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து தமிழர்கள் வந்து படம் பார்த்து செல்வதை பார்க்க முடிந்தது என்றார்.

    தமிழ் படங்களுக்கு வரவேற்பு

    தமிழ் படங்களுக்கு வரவேற்பு

    கன்னட இயக்குநர் நஞ்சுண்டா கூறுகையில், மெட்ராஸ் மற்றும் அரண்மனை ஆகிய திரைப்படங்கள் ஓடும் கர்நாடக தியேட்டர்களில் ரசிகர்கள் அதிகம் வருகின்றனர் என்றார். ஜெயலலிதாவுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டம் நடத்த பெங்களூர்வரும் அதிமுக பெண்கள் மற்றும் ஆண்களும், போராட்டம் நடத்திவிட்டு மிச்ச நேரத்தில் பொழுது போக்கிற்காக தியேட்டர்களுக்கு செல்வதை பார்க்க முடிந்தது.

    English summary
    While bus services from Bangalore to Tamil Nadu have come to a complete stop, the flow of people the other way has not stopped. And it is not just the supporters of Jayalalithaa who are thronging Bangalore.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X