காலாவை பார்க்க வேணாம்னு சொல்லல... ஜுராசிக் வேர்ல்டு படத்தையும் பாருங்கன்னு சொல்றோம்
காலாவை பார்க்க வேண்டாம்னு சொல்லவில்லை. ஜுராசிக் வேர்ல்டு படத்தையும் பாருங்க என்றுதான் சொல்கிறோம்.
Recommended Video

சென்னை: காலா படத்தை பார்க்கும் அதே ஆர்வத்தை ஜுராசிக் வேர்ல்டு போன்ற சிறந்த படங்களையும் பார்க்கலாமே.
ரஜினிகாந்தின் காலா படம் இன்று உலகம் முழுவதும் ரிலீஸானது. தியேட்டர் வாசல்களில் ரசிகர்கள் பரவசம் அடைந்து பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் மகிழ்ச்சியை கொண்டாடினர்.

காலா படத்துக்கு ரசிகர்கள் மட்டுமல்லாது பொதுமக்களும் ஆர்வம் காட்டி வருகின்றனர். ரஜினிகாந்த் படம் என்றாலே சிறிய குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவரும் தியேட்டர் நோக்கி படையெடுப்பது வழக்கமான ஒன்றுதான்.
அதே வேளையில் நேற்று ரிலீஸான ஜுராசிக் வேர்ல்டு ஃபாலன் கிங்டம் படம் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டுள்ளது. 3 ஆண்டுகளுக்கு பிறகு ஜுராசிக் வேர்ல்டு தீம் பார்க் சேதமடைந்த நிலையில் இஸ்லா நுப்லர் தீவுகளில் மீதமுள்ள டைனோசர்களை காக்க வேண்டி ஓவன் கிராடியும் கிளாரி டியரிங்கும் செல்வதே படத்தின் கதையாகும்.
பின்னர் ஒட்டுமொத்த கோள்களையும் மிரட்டும் ராட்சத டைனோசர்களை பார்த்துவிட்டு அவற்றை அழிக்க முயற்சி செய்வர். இதை குழந்தைகள் விரும்பி பார்ப்பர். எனவே காலா படத்துக்கு காட்டும் ஆர்வத்தை ஜுராசிக் வேர்ல்டு படத்துக்கும் காட்ட வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாகும்.


Click it and Unblock the Notifications











