twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    லிடியன் நாதஸ்வரம் : ரூ. 7 கோடி வென்ற சென்னை சிறுவனின் மதம், சாதியை கூகுளில் தேடும் மக்கள்

    By Siva
    |

    Recommended Video

    Lydian Nadhaswaram: உலகையே திரும்பிப் பார்க்க வைத்த சென்னை பையன்- வீடியோ

    சென்னை: பியானோ ஜீனியஸ் லிடியன் நாதஸ்வரத்தின் சாதியை கூகுள் செய்து கொண்டிருக்கிறார்கள் மக்கள்.

    சிபிஎஸ் தொலைக்காட்சி நடத்திய தி வேர்ல்ட்ஸ் பெஸ்ட் போட்டியில் 2 கைகளில் 2 பியானோக்களை வாசித்து ரூ. 7 கோடி பரிசு வென்றுள்ளார் சென்னையை சேர்ந்த 13 வயது சிறுவன் லிடியன் நாதஸ்வரம்.

    இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானின் கே.எம். இசைப் பள்ளி மாணவன் லிடியன் என்பது குறிப்பிடத்தக்கது.

     2 கைகளில் 2 பியானோ வாசித்த சென்னை சிறுவனுக்கும், ஏ.ஆர். ரஹ்மானுக்கும் என்ன தொடர்பு? 2 கைகளில் 2 பியானோ வாசித்த சென்னை சிறுவனுக்கும், ஏ.ஆர். ரஹ்மானுக்கும் என்ன தொடர்பு?

    லிடியன்

    லிடியன்

    அடேங்கப்பா நம்ம சென்னையை சேர்ந்த சிறுவன் 150க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்ட போட்டியில் வெற்றி பெற்றிருக்கிறார் என்று பலரும் பெருமை அடைந்துள்ளனர்.

    மதம்

    மதம்

    லிடியனின் சாதனையை நினைத்து பெருமைப்படுபவர்கள் ஒருபுறம் இருக்க அவரின் பெற்றோர் யார், மதம், சாதி என்ன என்று கூகுளில் தேடுபவர்களும் உள்ளனர். ஒரு திறமைசாலி கிடைத்திருக்கிறார் என்று கொண்டாடாமல் சாதியையா தேடுவது?. நல்ல வேளை முண்டாசுக்கவி பாரதி உயிருடன் இல்லை.

    கூகுள்

    கூகுள்

    லிடியன் விஷயத்தில் மட்டும் அல்ல விளையாட்டுத் துறையை சேர்ந்த யாராவது வெற்றி பெற்றாலும் கூட அவர்களின் சாதியை தேடுவது வழக்கமாகிவிட்டது. இந்த தேடல் என்று ஓயுமோ?

    இசை

    இசை

    லிடியனின் தந்தை வர்ஷன் சதீஷ். அவர் இசையமைப்பாளராக உள்ளார். லிடியனின் அக்கா அமிர்தவர்ஷினியும் நன்றாக பியானோ வாசிப்பார். அக்காவும், அப்பாவும் தான் தன் முதல் பியானோ ஆசிரியர்கள் என்கிறார் லிடியன். சிறுவனின் திறமையை பாராட்டுவோம், சாதி, மதத்தை தேட வேண்டாம்.

    English summary
    It is a shame that people are searching for piano genius Lydian Nadhaswaram's religion and caste on google.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X