தூத்துக்குடியில் விஜய் புயல்.. தளபதியை காண திரண்டு வந்த மக்கள்.. சேஃப்ட்டி ரொம்ப முக்கியம்!

தூத்துக்குடி: திருநெல்வேலியை தொடர்ந்து தூத்துக்குடியில் தற்போது விஜய் தனது தேர்தல் பிரச்சாரத்தை நடத்தி வரும் நிலையில், ஒட்டுமொத்த மக்கள் கூட்டமும் விஜய்யை காண வீதியில் திரண்டுள்ளனர். தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக இப்படியொரு மக்கள் கூட்டத்தையும் எழுச்சியையும் பார்த்திருக்க முடியாது என பலரும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

திருநெல்வேலியில் நடந்த கூட்டத்தின் போது கரூரில் நடந்த உயிரிழப்பு பழியை தன் மீது போட்டார்கள், ஜன நாயகன் படத்தை ரிலீஸ் செய்ய விடாமல் இன்று வரை முடக்கி வருகின்றனர். குடும்ப பிரச்னையை சரியாக தேர்தல் நேரத்தில் வெளிக்கொண்டு வந்தனர். ஆனால், தொடர்ந்து இந்த விஜய்க்காக மக்கள் இப்படி வரவேற்பை கொடுப்பதை பார்த்து அவர்கள் பயந்து போயுள்ளனர் என பேசியது டிரெண்டாகி வருகிறது.

People shows massive support to TVK Leader Vijay at Tuticorin stuns social media

இந்நிலையில், திருநெல்வேலியை ஓவர்டேக் செய்யும் அளவுக்கு மக்கள் வெள்ளம் தூத்துக்குடியில் விஜய்க்கு ஆரவாரம் செய்து வருகிறது. கரூர் போல எந்தவொரு கூட்ட நெரிசல் சம்பவமும் நிகழாமல் இருக்க வேண்டும் என்றும் மக்கள் பாதுகாப்பான முறையில் விஜய்யை பார்க்க வேண்டும் என்றும் ரசிகர்கள் மற்றும் தவெகவினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

50 வருஷத்துக்கு ஒருமுறை வரும் தேர்தல்: இந்த தேர்தல் 5 வருஷத்துக்கு ஒரு முறை வரும் சாதாரண தேர்தல் அல்ல, உங்கள் தலையெழுத்தை மாற்ற 50 வருஷத்துக்கு ஒரு முறை வரும் அபூர்வமான தேர்தல். இந்த தேர்தலில் திமுகவிடம் பல கூட்டணி கட்சிகள் காசுக்காக இணைந்துள்ளனர். ஆனால், ஒட்டுமொத்த மக்களும் இந்த விஜய்யை நம்பி என்னுடன் கூட்டணி வைத்துள்ளனர் என சரவெடியாக பேசிய நிலையில் விஜய்யை காண தற்போது தூத்துக்குடியில் மக்கள் வெள்ளம் அலைமோதுகிறது.

தூத்துக்குடியில் விஜய் புயல்: விஜய் பிரச்சாரம் பண்ண வெளியவே வரமாட்டேங்கிறார். தொடர்ந்து ஆப்செண்ட் ஆகி வருகிறார். மற்ற தலைவர்கள் எல்லாம் பிரச்சாரம் செய்து வருவதாக எதிர் தரப்பினர் தொடர்ந்து ட்ரோல் செய்து வந்த நிலையில், விஜய் பிரச்சாரத்துக்கு வந்தால் என்ன ஆகும் மக்களின் சப்போர்ட் எப்படி இருக்கும் என்பதை தொடர்ந்து மக்கள் வெளிப்படுத்தி வருகின்றனர். திருநெல்வேலி, தூத்துக்குடி மக்கள் மிகப்பெரிய மாற்றத்தை விரும்புகின்றனர் என்றே மீடியாக்கள் செய்திகளை வெளியிட ஆரம்பித்துள்ளன.

மக்கள் பாதுகாப்பு முக்கியம்: தவெக தலைவர் விஜய்யை நேரில் காண மக்கள் ஆர்வம் காட்டி வருவது புரிந்தாலும், கண்டிப்பாக ஒவ்வொருவரும் தங்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் கூட்ட நெரிசல் சம்பவங்கள், வாகனத்துக்குப் பின்னாடியே பைக்கில் சென்று விபத்தில் சிக்கி அடிபடுவது, உயிரை இழப்பது போன்ற அசாதாரண சூழலை உருவாக்கிவிடக் கூடாது என்றும் தவெகவினர் சோஷியல் மீடியாவில் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X