என் காதலி என்ன செய்றாளோ?: ராம், ஜானுவை பார்த்து ஏங்கும் ஆண்கள்
சென்னை: விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் வெளியான 96 படத்தை பார்த்துவிட்டு பலருக்கும் மலரும் நினைவுகளாக உள்ளது.
பிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, த்ரிஷா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான 96 படம் அனைவருக்கும் பிடித்துள்ளது. படத்தை பார்ப்பவர்களால் பள்ளி காலத்தில் தங்களுக்கு ஏற்பட்ட காதல், ஈர்ப்பு குறித்து நினைக்காமல் இருக்க முடியவில்லை.
மக்கா, பழசெல்லாம் அப்படியே நினைவுக்கு வருகிறதே என்பதே பலரின் கருத்து. ட்விட்டரில் 96 படம் பற்றி தான் பேச்சாக உள்ளது.
ராம்
96 படத்தை பார்ப்பவர்கள் திரையில் ராம் மற்றும் ஜானுவை அல்ல மாறாக தங்களின் கடந்த காலத்தை தான் பார்க்கிறார்கள்.
கோடி
96 படம் ரிலீஸான மூன்றே நாட்களில் கேரளாவில் ரூ. 1.54 கோடி வசூல் செய்துள்ளது. பிரேமத்தை கொண்டாடியவர்கள் 96 படத்தை கொண்டாடாமலா இருப்பார்கள்.
ஜெசி
விண்ணைத் தாண்டி வருவாயா ஜெசிக்கு பிறகு ஜானு தான் என்கிறார்கள் த்ரிஷாவின் ரசிகர்கள்.
பார்க்க வேண்டும்
96 கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் என்கிறார்கள் படத்தை பார்த்தவர்கள்.
ஃபீலிங்
96 படத்தின் சில காட்சிகளை பார்க்கும்போது கண்ணோரமாக கண்ணீர் எட்டிப் பார்க்கிறது.
இப்படியும்...
நீங்க ராம் இடத்தில இருந்து படத்த பாக்காதீங்க..ஜானு புருஷன் இடத்தில் இருந்து படத்த பாருங்கய்யா..என்று இப்படியும் ட்வீட்டுகிறார்கள்.


Click it and Unblock the Notifications











