ஆம்பள செஞ்சா தப்பில்ல, நான் செஞ்சா மட்டும் பெரிய குத்தமா?: ப்ரியங்கா சோப்ரா

By Siva

மும்பை: ஒரு ஆண் செய்தால் தவறு இல்லை. அதையே நான் செய்ததால் பெரிய குற்றம் போன்று பேசுகிறார்கள் என்று பாலிவுட் நடிகை ப்ரியங்கா சோப்ரா தெரிவித்துள்ளார்.

பாலிவுட்டில் இருந்து ஹாலிவுட் சென்று கிட்டத்தட்ட அங்கேயே செட்டில் ஆகிக் கொண்டிருக்கும் ப்ரியங்கா சோப்ரா தன்னை விட 10 வயது சிறியவரான அமெரிக்க பாடகர் நிக் ஜோனஸை கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

அவருக்கு திருமணம் என்ற பேச்சு எழுந்ததில் இருந்து இன்னும் அவர்களின் வயது வித்தியாசம் பற்றி சமூக வலைதளங்களில் விமர்சிக்கிறார்கள்.

ப்ரியங்கா சோப்ரா

ப்ரியங்கா சோப்ரா

ப்ரியங்கா சோப்ரா ஹாலிவுட்டில் செட்டிலாக வசதியாக அமெரிக்கரான நிக் ஜோனஸை திருமணம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் அமெரிக்காவுக்கு சென்ற ப்ரியங்கா நிக் என்னும் குழந்தையை தத்தெடுத்து திருமணம் செய்து கொண்டதாக மீம்ஸ் போட்டு கலாய்த்தார்கள். அந்த மீம்ஸை பார்த்து பாலிவுட் பிரபலங்கள் கோபம் அடைந்து ப்ரியங்காவுக்கு ஆதரவாக பேசினார்கள். இந்நிலையில் வயது வித்தியாசம் பற்றி ப்ரியங்காவே மனம் திறந்து பேசியுள்ளார்.

வயது வித்தியாசம்

எனக்கும், என் கணவருக்கும் இடையேயான வயது வித்தியாசம் பற்றி மக்கள் நிறைய பேசினார்கள், இன்னும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு ஆண் தன்னை விட வயதில் மிகவும் குறைவான பெண்ணை திருமணம் செய்து கொண்டால் யாரும் கண்டுகொள்வது இல்லை. சொல்லப் போனால் அந்த ஜோடியை அவர்களுக்கு பிடிக்கிறது. அதுவே நான் செய்தால் மட்டும் தவறா என்று கேள்வி எழுப்பியுள்ளார் ப்ரியங்கா சோப்ரா.

கணவர்

திருமணம் முடிந்த புதிதில் கலாச்சார வித்தியாசம் காரணமாக எனக்கும், நிக் ஜோனஸுக்கும் இடையே சின்னச் சின்ன பிரச்சனைகள் வந்தது. ஆனால் அது சரியாகிவிட்டது. சொல்லப் போனால் நிக் என்னை நன்கு புரிந்து கொண்டு மிகவும் ஆதரவாக உள்ளார். நான் சரியான நபரை தான் தேர்வு செய்து திருமணம் செய்துள்ளேன் என்று ப்ரியங்கா தெரிவித்துள்ளார்.

அன்பு

ப்ரியங்காவுக்கும், நிக்கிற்கும் இடையே பிரச்சனையாக உள்ளது. அவர்கள் விவாகரத்து நோக்கி சென்று கொண்டிருக்கிறார்கள் என்று முன்பு செய்தி வெளியானது. ஆனால் இன்ஸ்டாகிராம் பக்கம் போனால் நிக்கும், ப்ரியங்காவும் ஒரே கொஞ்சல்ஸாக உள்ளது. இதை பார்ப்பவர்கள் வாவ், என்ன ஒரு காதல் என்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X