Exclusive : வீடு, உதிரிப்பூக்கள் மாதிரி ‘டு லெட்’யும் மக்கள் கொண்டாடுவார்கள்: செழியன் நம்பிக்கை
உண்மையான படங்களை நிச்சயம் மக்கள் கொண்டாடுவார்கள் என டு லெட் பட இயக்குநர் செழியன் தெரிவித்துள்ளார்.
சென்னை : டு லெட் படத்தை மக்கள் நிச்சயம் கொண்டாடுவார்கள் என இயக்குனர் செழியன் தெரிவித்துள்ளார்.
சிறந்த திரைப்படத்துக்கான இந்திய தேசிய விருது, இத்தாலி, இந்தோனேசியா உள்பட உலகின் பல்வேறு நாடுகளில் நடைபெற்ற திரைப்பட விழாக்களில் பங்கேற்று பல்வேறு பிரிவுகளின் கீழ் மொத்தம் 32 விருதுகளை வென்ற படம் டு லெட். இப்படத்தை இயக்கியவர் செழியன்.
சென்னை பெருநகரில் வாடகை வீடுகளில் பல இன்னல்களை சந்தித்து வரும் பல ஆயிரம் குடும்பங்களின் நிலையை, ஒரு குடும்பத்தின் திண்டாட்டத்தை முன்மாதிரியாகக் காட்டி பதிவு செய்திருக்கிறது டு லெட்.
இப்படம் இன்று வெளியாவதையொட்டி இயக்குனர் செழியனை சந்தித்தேன். அவருடன் உரையாடியதில் இருந்து,

மாற்றம்:
" டு லெட் ஒரு எதார்தமான படம். உதிரிப்பூக்கள், வீடு போன்ற படங்களை கொண்டாடியது போன்ற என் படத்தையும் மக்கள் கொண்டாடுவார்கள் என நம்புகிறேன். தற்போது தமிழ் சினிமா நிறைய மாறியிருக்கிறது. எதார்த்தமான படைப்புகள் நிறைய வருகின்றன. மக்கள் அதை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்.

உண்மையான படம்:
நான் வாழ்க்கையில் சந்தித்த அனுபவங்களின் அடிப்படையில் தான் டு லெட் படத்தை எடுத்துள்ளேன். எனது நண்பர்களுக்கும் இந்த அனுபவம் உள்ளது. இது ஒரு உண்மையான படம். ஒரு படத்தில் உண்மை இருந்தால், அது நிச்சயம் ஜெயிக்கும். உண்மையான படைப்பை மட்டுமே உலக சினிமாவாக கொண்டாட முடியும்.

முக்கியக் காரணம்:
டு லெட் படத்தை பொறுத்த வரை இதில் பெரிய நடிகர்களை நடிக்க வைக்க எனக்கு விருப்பம் இல்லை. நடிகர் அல்லாதவர்களை தான் நடிக்க வைக்க வேண்டும் என முடிவு செய்தேன். அதனால் தான் எனது உதவியாளராக பணியாற்றி வந்த சந்தோஷையும், நாடக கலைஞரான ஷீலாவையும் இந்த படத்தில் நடிக்க வைத்தேன். நான் எதிர்பார்த்தது வீண்போகவில்லை. படம் எதார்த்தமாக வருவதற்கு அது முக்கிய காரணமாக அமைந்தது.

முக்கியக் காரணம்:
டு லெட் படத்தை பொறுத்த வரை இதில் பெரிய நடிகர்களை நடிக்க வைக்க எனக்கு விருப்பம் இல்லை. நடிகர் அல்லாதவர்களை தான் நடிக்க வைக்க வேண்டும் என முடிவு செய்தேன். அதனால் தான் எனது உதவியாளராக பணியாற்றி வந்த சந்தோஷையும், நாடக கலைஞரான ஷீலாவையும் இந்த படத்தில் நடிக்க வைத்தேன். நான் எதிர்பார்த்தது வீண்போகவில்லை. படம் எதார்த்தமாக வருவதற்கு அது முக்கிய காரணமாக அமைந்தது.

விருதுகளும், பாராட்டுகளும்:
உலக திரைப்பட விழாக்கள் பலவற்றிலும் டு லெட் படத்தை பாராட்டியிருக்கிறார்கள். நூறு திரைப்பட விழாக்களுக்கு மேல் பங்கேற்று, 84 பிரிவுகளில் நாமினேட் செய்யப்பட்டு, 32 விருதுகளை வென்றிருக்கிறது டு லெட். படத்தில் உள்ள உண்மை தான் இத்தனை பாராட்டுகளுக்கும் காரணம். உலக ரசிகர்கள் கொண்டாடிய இந்த சினிமாவை என் மக்களும் நிச்சயம் ஏற்றுக்கொள்வார்கள்", என நம்பிக்கையுடன் விடைபெறுகிறார் இயக்குனர் செழியன்.
இயக்குநர் செழியனின் வீடியோ பேட்டியைப் பார்க்க...


Click it and Unblock the Notifications











