twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மறுக்கப்பட்டது தேசிய விருது.. குவிகிறது பல திரை விருதுகள்.. பேரன்பிற்கு கிடைத்த பேரன்பு!

    By Staff
    |

    Recommended Video

    பேரன்பு பார்த்து அசந்துபோன ரசிகர்கள்- வீடியோ

    சென்னை : இயக்குனர் ராம் இவர் இயக்குனர் பாலு மகேந்திராவின் சினிமா பட்டறையில் இருந்து கண்டெடுத்த முத்து பல வருடங்கள் உதவி இயக்குனராக பணிபுரிந்து பின் இயக்குனர் ஆனார்.

    தனது முதல் திரைப்படத்தில் ஒரு அழகியே காதல் கதையை வேறு ஒரு வடிவில் கூறி இருப்பார். படத்தில் நடித்த ஜீவா மற்றும் அஞ்சலியின் நடிப்பு இன்றளவும் பேசப்படுகிறது.

    Peranbu a movie which forget to celebrate by fans and now bagging more awards.

    படத்திற்கு ஏற்றது போல படத்தின் பெயர் அமைந்துள்ளது கற்றது தமிழ் பி.ஏ படத்தில் ஒலித்த "பறவையே எங்கு இருக்கிறாய்" பாடல் இன்றளவும் ரசிகர்களிடையே நீங்கா இடம் பிடித்துள்ளது.

    தனது இரண்டாவது படத்தை ஐந்து வருடங்கள் கழித்து எடுத்தார் ராம் படத்தில் அவரும் நடித்தார். ஒரு அப்பா மற்றும் மகள் இடையே நடக்கும் பாச போராட்டத்தை ஒரு யாததார்த்தமான திரைக்கதை உடன் நமக்கு வழங்கி இருந்தார் ராம்.

    தனது இரண்டாவது படத்திலே இந்தியாவின் உயரிய விருதான தேசிய விருதை பெற்றார். இப்படத்திற்காக மூன்று விருதை பெற்றுத்தந்தார் இயக்குனர் ராம். இதில் நா. முத்துக்குமார் வரிகளில் வரும் ஆனந்த யாழை மீட்டுகிறாய் பாடலில் வரும் வரிகள் ஒரு தந்தை தன் மகளின் மேல் இருக்கும் பாசத்தை வர்ணிக்கும் ஒரு நல்ல பாடலாக அமைந்து இருந்தது.

    தனது மூன்றாவது படமாக தரமணி என்ற படத்தை இயக்கினார் ராம் படத்தில் ஒரு ஆண்மகன் மற்றும் ஒரு பெண்மணி இடையே நடக்கும் கோபம், காதல், நட்பு, பாசம். போன்ற பல விஷயங்களை உள் புகுத்தி நமக்கு ஒரு நல்ல சிறந்த படமாக வழங்கி இருப்பார் ராம்.

    இப்படம் மிக பெரிய சர்ச்சையை கிளப்பியது தணிக்கை குழு படத்திற்கு வழங்கிய சான்றிதழ் பிரச்சனையை ஏற்படுத்தியது. இப்படம் பல வெளிநாட்டு திரைப்பட விழாக்களில் செலக்ட் செய்யப்பட்டது. மற்றும் பல சினிமா விருதுகளையும் பெற்றது.

    நான்காவது திரைப்படமாக பேரன்பு என்ற படத்தை இயக்கினார் ராம். படத்தில் மம்மூட்டி மற்றும் சாதனா அஞ்சலி நடித்து இருந்தனர். படம் எதிர் பார்த்த வெற்றியை பெறவில்லை. ஒரு தந்தை தன் மாற்றுத்திறனாளி மகளை எப்படி வளர்க்கிறார் அவள் சமூகத்தில் சந்திக்கும் அவலங்களில் இருந்து எப்படி காப்பாற்றபடுகிறாள் என்று ஒரு தந்தை துடிக்கும் ஒரு பாச போராட்டம் தான் பேரன்பு.

    படம் பல வெளிநாட்டு திரைப்பட விழாக்களில் மிகவும் பேசப்பட்டது. படத்திற்கு தேசிய விருது கிடைக்கும் என்று எல்லோராலும் எண்ணப்பட்டது, ஆனால் கிடைக்கவில்லை. சமீபத்தில் நடைபெற்ற ஜீ தமிழ் சினிமா விருது விழாவில் பேரன்பு படத்திற்கு சிறந்த கதைக்கான விருது வழங்கப்பட்டது.

    வெளிநாட்டு ரசிகர்கள் ரசித்துப் பாராட்டிய ராமின் பேரன்பு தியேட்டர்களில் ஓடவில்லை என்றாலும், தமிழ் சினிமாவின் பொக்கிஷ பட்டியலில் என்றும் நிலைத்திருக்கும்.

    English summary
    Rejected the film from national awards. Forget to celebrate by fans.and after all this movie bagging awards in all cinema functions and in international film festivals. The movie name called "Peranbu"
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X