சிம்பு மட்டும் அல்ல ஜி.வி,மம்மூட்டியையும் விட்டு வைக்காத தமிழ் ராக்கர்ஸ்: 'அவர்' என்ன தான் செய்றார்?
Recommended Video

சென்னை: சிம்பு படம் மட்டும் அல்ல சர்வம் தாளமயம் மற்றும் பேரன்பு ஆகிய படங்களையும் வெளியிட்டுவிட்டது தமிழ் ராக்கர்ஸ்.
எந்த படம் வெளியானாலும் அதை அதே நாளில் சட்டவிரோதமாக வெளியிட்டு வருகிறது தமிழ் ராக்கர்ஸ் இணையதளம். தமிழ் ராக்கர்ஸ் ஆட்களை பிடித்து சிறையில் தள்ளுவேன் என்று ஒருவர் சபதம் போட்டார். அந்த சபதம் இன்னும் சபதமாகவே உள்ளது.
இந்நிலையில் தமிழ் ராக்கர்ஸால் ஜி.வி. பிரகாஷ், மம்மூட்டி ஆகியோரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஜிவி பிரகாஷ்
ராஜீவ் மேனன் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் நேற்று முன்தினம் வெளியான சர்வம் தாளமயம் படம் தமிழ் ராக்கர்ஸில் அதுவும் நல்ல பிரிண்ட்டில் வெளியாகியுள்ளது.

பேரன்பு
ராம் இயக்கத்தில் மம்மூட்டி, சாதனா அசத்தலாக நடித்துள்ள பேரன்பு படத்தை ஹெச்.டி. பிரிண்ட்டில் வெளியிட்டுள்ளது தமிழ் ராக்கர்ஸ். பேரன்பு படத்திற்கு நல்ல விமர்சனம் கிடைத்துள்ள நிலையில் தமிழ் ராக்கர்ஸ் இப்படி செய்துள்ளது.

வந்தா ராஜாவாதான் வருவேன்
சுந்தர் சி. இயக்கத்தில் சிம்பு நடித்த வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தையும் வெளியிட்டுள்ளது தமிழ் ராக்கர்ஸ். படம் ரிலீஸான சில மணிநேரங்களில் அதை சட்டவிரோதமாக லீக் செய்து வருகிறது தமிழ் ராக்கர்ஸ்.

தமிழ் ராக்கர்ஸ்
புதுப்படங்களுக்கு நல்ல விமர்சனம் வந்தால் அதை தியேட்டரில் பார்க்க திட்டமிடுபவர்களும் தமிழ் ராக்கர்ஸில் படத்தை பார்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











