twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ராமின் 'பேரன்பு' படத்திற்கு கிடைத்த பெருமை.. ஆசியாவின் முதல் பிரத்யேக காட்சி திரையிடல்!

    By Vignesh Selvaraj
    |

    ராம் இயக்கத்தில் மம்முட்டி, அஞ்சலி, தங்கமீன்கள் சாதனா, அமீர் ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் 'பேரன்பு'. இப்படம் தமிழ், மலையாளம் ஆகிய இரு மொழிகளிலும் உருவாகியுள்ளது.

    நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளில் நடைபெற்ற திரைப்பட விழாக்களில் பங்கேற்று பல விருதுகளையும் பெற்றுள்ளது. தற்போது, ஷாங்காய் நகரில் நடைபெறவிருக்கும் திரைப்பட விழாவில் திரையிடப்பட இருக்கிறது.

    Peranbu screening in world premiere shangai

    47-வது ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் 'பேரன்பு' திரைப்படத்தின் முதல் உலக பிரத்யேக காட்சி ஜனவரி மாதம் திரையிடப்பட்டது. 187 உலகத் திரைப்படங்கள் போட்டியிட்ட பார்வையாளர்கள் விருதிற்கான பிரிவில் பேரன்பு (Resurrection) முதல் 20 திரைப்படங்களில் இடம்பெற்ற ஒரே இந்தியத் திரைப்படம் என்ற சிறப்பைப் பெற்றது.

    மேலும் சிறந்த ஆசிய படத்திற்கு கொடுக்கும் NETPAC விருதிற்கு தேர்வானது. ஜூன் 16 முதல் 25-ம் தேதி வரை நடைபெறவுள்ள 21-வது ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவிற்கு தேர்வாகியுள்ளது 'பேரன்பு' திரைப்படம். சீனாவின் ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவில் ஆசியாவின் முதல் பிரத்யேக காட்சியாக பேரன்பு திரையிடப்பட இருக்கிறது.

    பேரன்பு திரைப்படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் கூடிய விரைவில் வெளியாகும். அதைத் தொடர்ந்து படம் தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்படும் என டைரக்டர் ராம் தெரிவித்துள்ளார்.

    English summary
    Mammootty, Anjali are leading in 'Peranbu' directed by Ram. Currently, 'Peranbu' will be screening at the film festival in Shanghai. Teaser and songs of the film will be released soon.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X