சத்யராஜும் அவரது மகளும்.. கலாச்சாரத்தையே காலி செய்கிறார்கள்.. பேரரசு குமுறல்

சென்னை: சத்யராஜும் அவரது மகளும் பேசுவது நமது கலாச்சாரத்தை காலி செய்வது போல இருக்கிறது என்று அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் இயக்குநர் பேரரசு தெரிவித்துள்ளார். அவரது இந்த பேச்சு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ் கடந்த வாரத்தில் அளித்த பேட்டியில், " திருமணம் என்பது அவரவர் விருப்பம். எனக்கு நிறுவனமயமாக்கப்பட்ட திருமணத்தில் உடன்பாடு இல்லை. தாலி கட்ட வேண்டும், மோதிரம் போட வேண்டும், மாலை மாற்ற வேண்டும் என்பதில் எல்லாம் உடன்பாடே இல்லை. திருமணம் செய்து கொண்டுதான் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று இல்லை. திருமணம் செய்து கொள்ளாமலும் குழந்தை பெற்றுக் கொள்ளலாம், அது அவரவர் விருப்பம்.

தம்பதிகளாக வாழ ஒரே வீட்டில் இருக்க வேண்டும் என்று இல்லை. தனித் தனி வீட்டில் தங்கிக் கொண்டே தம்பதிகளாக வாழ முடியும் என பல கருத்துக்களை தெரிவித்தார். திவ்யா சத்யராஜின் கருத்துக்கு பலர் வரவேற்பும் சிலர் எதிர்ப்பும் தெரிவித்த நிலையில், நடிகர் சத்யராஜ் தனது மகளின் கருத்துக்கு தான் ஆதரவு தெரிவிப்பதாக தெரிவித்தார்.

Perarasu Criticizes Sathyaraj amp amp Divya Sathyaraj Over Marriage Views Cultural Debate Intensifies

பேரரசு குமுறல்: இப்படி இருக்கையில் இயக்குநர் பேரரசு தான் சமீபத்தில் அளித்த பேட்டியில், " நீங்கள் எப்படி வேண்டுமானாலும் வாழ்ந்து கொள்ளுங்கள், அதை நாங்கள் எதுவும் சொல்லவில்லை. ஆனால் கல்யாணம் செய்து கொள்ளாமல் வாழ்வது, கல்யாணம் செய்து கொள்ளாமல் குழந்தை பெற்றுக் கொள்வது, யாரும் யாருடன் வேண்டுமானாலும் வாழலாம் என்று நீங்கள் மக்களுக்குச் சொல்லாதீர்கள். கலாச்சாரம் தேவையில்லை, பண்பாடு தேவையில்லை என்று நீங்கள் சொல்லாதீங்க. நீங்கள் பின்னோக்கி போங்க, ஆடைகள் எப்படி வேண்டுமானாலும் அணிந்து கொள்ளுங்கள். நாம் ஆதிவாசிகளைப் போலவே இருந்துவிட்டுப் போகலாம், அவர்களுக்கு பண்பாடு இல்லை. கலாச்சாரம் இல்லை, ஆடைகள் இல்லாமல் அவர்கள் வாழ்ந்தார்கள். நீங்களும் அதுபோல வாழ்ந்து விட்டுப் போங்கள், உங்களை யார் வேண்டாம் என்று கூறினார்கள்.

பதில் வருமா?: அவரது மகள் அப்படிக் கூறினார் என்றால் அதற்கு சத்யராஜ் சப்போர்ட் செய்கிறார். அது நமது கலாச்சாரத்தையே காலி செய்வது போல இருக்கிறது என்று பேசி உள்ளார். இவரது இந்த பேச்சுக்கு இணையவாசிகள் பலரும் சத்யராஜ் இதற்கு என்ன பதில் அளிப்பார் என்று பலரும் காத்துக் கொண்டிருக்கிறோம் என பலரும் பதிவிட்டு வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X