''கண்ணே உந்தன் கண்களில் இந்திர ஜாலம் கண்டேன்!''
பேரரசுவின் திகார் படம் சூடு பிடிக்கத் தொடங்கி விட்டது. படு விறுவிறுப்பாக படப்பிடிப்பை தொடங்கி ஓடிக் கொண்டிருக்கிறார் பேரரசு.
சமீபத்தில் துபாய்க்குப் போய் ஒரு கிளுகிளுப்பான பாடல் காட்சியை சூடாக சுட்டு வந்துள்ளார் பேரரசு. நாயகி அகான்ஷா பூரியும், நாயகன் முகுந்தனும் இணைந்து இந்தப் பாடலுக்காக ஆடிப் பாடியுள்ளனராம்.
முற்றிலும் புதிய தொழில்நுட்பத்துடன் இந்தப் படத்தை இயக்குகிறாராம் பேரரசு.

சரவெடிப் படங்கள்
திருப்பாச்சி, சிவகாசி, திருப்பதி, பழனி, திருவண்ணாமலை என சரவெடியான வசனங்களுடன் கூடிய படங்களை இயக்கியவர்தான் பேரரசு.

முற்றிலும் புதிய கோணத்தில்
தற்போது நவீன தொழில்நுட்பத்துடன் முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் இயக்கும் படத்திற்கு திகார் என்று பெயரிட்டுள்ளார்.

நாயகன் முகுந்தன்- நாயகி அகான்ஷா பூரி
கதாநாயகனாக முகுந்தன் என்பவர் அறிமுகமாகிறார். கதாநாயகியாக மும்பை மாடல் அழகி அகான்ஷா பூரி அறிமுகமாகிறார்.

புத்தம் புது ரோஜா
நாயகி அகான்ஷா படு அழகாக இருக்கிறார். ஒரு சாயலில் அப்படியே பழைய ரோஜா போலவே இருக்கிறார்.

கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இயக்கம் – பேரரசு
வழக்கம் போல கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இயக்குகிறார் பேரரசு.

துபாயில் ஒரு பாடல்
இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் துபாயில் நடைபெற்றது முகுந்தன் ,அகான்ஷா பூரி பங்கேற்ற கண்ணே உந்தன் கண்களில் இந்திர ஜாலம் கண்டேன். பெண்ணே ! உந்தன் நெஞ்சினில் மாயா ஜாலம் கண்டேன் என்ற பாடல் காட்சி மிக பிரமாண்டமான முறையில் நடைபெற்றதாம்.


Click it and Unblock the Notifications











