twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஒரு தாயின் பாசத்துக்கு கிடைத்த வெற்றி.. பேரறிவாளன் விடுதலை.. ஜிவி பிரகாஷ் மகிழ்ச்சி ட்வீட்!

    |

    சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 31 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்து வந்த பேரறிவாளனை உச்சநீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.

    பேரறிவாளனின் கருணை மனுவை ஏற்றுக் கொண்டு அவரை விடுதலை செய்ய வேண்டும் என பல ஆண்டுகளாக அவரது தாயார் அற்புதம்மாள் பெரும் போராட்டம் செய்து வந்தார்.

    அந்த பாச போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி தான் இது என நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி. பிரகாஷ் குமார் தனது கருத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

    பேரறிவாளன் விடுதலை

    பேரறிவாளன் விடுதலை

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளனை விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது. உச்ச நீதிமன்றம் தனக்கு உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி, வழக்கில் 142-வது பிரிவைச் செயல்படுத்தி, விடுதலை செய்துள்ளது. இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு என தமிழகத்தில் பலரும் இனிப்புகளை வழங்கி கொண்டாடி வருகின்றனர்.

    அற்புதம்மாள் போராட்டம்

    அற்புதம்மாள் போராட்டம்

    பேரறிவாளனை விடுவிக்க அவரது தாயார் அற்புதம்மாள் கடந்த 30 ஆண்டுகளாக பெரும் போராட்டத்தை நிகழ்த்தி வந்தார். குடியரசுத் தலைவர் வரை கருணை மனுவை கொடுத்திருந்தார். தமிழக சட்டசபையில் பேரறிவாளன் விடுதலை செய்ய வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    Recommended Video

    Perarivalan Mother Speech | பேரறிவாளன் தாய் Arputhammal பேட்டி | Oneindia Tamil
    ஜிவி பிரகாஷ்

    ஜிவி பிரகாஷ்

    பேரறிவாளன் விடுதலைக்காக சினிமா துறையில் இருந்து பல பிரபலங்கள் குரல் கொடுத்து வந்தனர். இந்நிலையில், பேரறிவாளன் விடுதலை அடைந்து விட்டார் என்கிற செய்தியை அறிந்ததுமே நடிகரும் இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ள ட்வீட் டிரெண்டாகி வருகிறது.

    ஒரு தாயின் பாசத்துக்கு கிடைத்த வெற்றி

    ஒரு தாயின் பாசத்துக்கு கிடைத்த வெற்றி

    நடிகரும் இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் "ஒரு தாயின் பாசத்துக்கு கிடைத்த வெற்றி என அற்புதம்மாளை டேக் செய்து வாழ்த்து கூறியுள்ளார். மேலும், சிறைத் தண்டனையில் இருந்து விடுதலையான பேரறிவாளனுக்கும் தனது வாழ்த்துக்களை ஜி.வி. பிரகாஷ் தெரிவித்துள்ளார். அரசியல் தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் என பலரும் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

    English summary
    Actor and Music Composer GV Prakash praises Arputhammal’s effort after hearing about Perarivalan release verdict by Supreme Court today.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X