ஆஸ்கர் பரிந்துரையில் தமிழன் நடித்த படம்: தமிழன்டா #OscarNoms

By Siva

லாஸ் ஏஞ்சல்ஸ்: 2019ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள ஒரு படத்தால் தமிழர்கள் பெருமிதம் கொள்ள வேண்டும்.

2019ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்கு படங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்கர் விருது விழா நடக்கும்போது ஒரு இந்திய படம் அந்த விருதை வாங்காதா என்று எதிர்பார்ப்புடன் இந்திய ரசிகர்கள் அந்த நிகழ்ச்சியை பார்ப்பார்கள்.

இந்நிலையில் இந்த ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள ஒரு படத்தால் தமிழர்கள் பெருமை அடைய வேண்டும்.

பீரியட்

பீரியட்

மாதவிடாய் பற்றி எடுக்கப்பட்ட படம் Period. End of Sentence. மாதவிடாய் குறித்த மூட நம்பிக்கைகளை இந்திய பெண்கள் எப்படி எதிர்த்து போராடுகிறார்கள் என்பதை பற்றிய படம். மேலும் நிஜமான பேட்மேனான கோவையை சேர்ந்த அருணாச்சலம் முருகானந்தத்தின் சிறப்பான பணியை பற்றிய படம். இந்த படம் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

பரிந்துரை

பரிந்துரை

வட இந்தியாவில் உள்ள ஹார்பூரில் இருக்கும் பெண்கள், சிறுமிகளை பற்றிய இந்த பீரியட் படத்தை ஈரானிய-அமெரிக்கரான ரைகா ஜெஹ்தாப்சி இயக்கியுள்ளார். 26 நிமிடங்கள் ஓடும் இந்த படம் Documentary short subject பிரிவில் ஆஸ்கருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

தமிழர்

தமிழர்

பெண்கள் மாதவிடாய் காலத்தில் பயன்படுத்த விலை குறைந்த நாப்கின்களை தயாரிக்கும் இயந்திரத்தை கண்டுபிடித்த கோவையை சேர்ந்த அருணாச்சலம் முருகானந்தம் பீரியட் படத்தில் வருகிறார். பெண்களின் அவதியை புரிந்து கொண்டு உதவி வரும் அவர் வரும் படம் ஆஸ்கருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது தமிழர்களுக்கு நிச்சயம் பெருமையான விஷயம்.

ஹாலிவுட்

ஹாலிவுட்

முன்னதாக அருணாச்சலம் முருகானந்தத்தின் வாழ்க்கை வரலாறு பாலிவுட்டில் பேட்மேன் என்ற பெயரில் படமாக்கப்பட்டது. அக்ஷய் குமார் அருணாச்சலமாக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தான் அருணாச்சலம் பற்றிய படம் ஆஸ்கருக்கு செல்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X