twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கழுகுகளை விரட்ட வரும் பெரியார்

    By Staff
    |

    சென்னை:பெரியாரின் நினைவுச் சின்னங்களை அழிக்க வேண்டும், ஒழிக்க வேண்டும் என்று வட்டமிடும் கழுகுகளைவிரட்டியடிக்கும் அளவுக்கு பெரியார் படம் வெற்றி மாலை சூட வேண்டும் என்று முதல்வர் கருணாநிதிகூறியுள்ளார்.

    ஞானராஜசேகரன் இயக்கத்தில், நடிகர் சத்யராஜ், குஷ்பு, ஜோதிர்மயி உள்ளிட்டோரின் நடிப்பில் உருவாகியுள்ளபெரியார் படத்தின் ஆடியோ சிடி வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது.

    இதில் முதல்வர் கருணாநிதி கலந்து கொண்டு முதல் சிடியை வெளியிட்டார். அதை நடிகர் கமல்ஹாசன் பெற்றுக்கொண்டார்.

    நிகழ்ச்சியில் கருணாநிதி பேசுகையில், நான் அரங்கத்தின் உள்ளே வந்தபோது என்னை அறியாமல், எனதுகால்கள் தள்ளாடின. ஆங்கிலத்தில் டென்ஷன் என்பார்களே, அந்த டென்ஷன் என்னைக் கவ்விக் கொண்டது.

    டென்ஷனுக்குக் காரணம் பெரியார் என்ற அந்தப் பெயர்தான். தம்பி சத்யராஜ் பெரியார் தோற்றத்தோடுகாணப்பட்ட காட்சியைப் பார்த்தபோது மெய் சிலிர்த்தது. நான் என்னையே இழந்தேன்.

    இது சத்யராஜ் செய்த தவம், வைரமுத்து செய்த தவம் என்று தம்பி வைரமுத்துவிடம் சொன்னேன்.

    பெரியாருடைய படத்தை நாம் தயாரித்துக் கொண்டிருக்கிற நேரத்தில் அவருடைய நினைவுச் சின்னங்களைஅழித்து விட வேண்டும், ஒழித்த விட வேண்டும் என்று சில கழுகுகள் வட்டமிட்டுக் கொண்டிருப்பதைக் காணமுடிகிறது.

    வட்டமிட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்று சொல்வதற்குக் காரணம், வட்டமிடுவது எது என்று உங்களுக்குத்தெரியும். நானே எழுதியிருக்கிறேன் வட்டமிடும் கழுகு என்று.

    அந்தக் கழுககுளை விரட்டியடிக்கிற அளவுக்கு இந்தப் பெரியார் படம் வெற்றி மாலை சூடும் என்ற நம்பிக்கைஎனக்கு உண்டு. வெற்றி மாலை சூட வேண்டும்.

    தந்தை பெரியார் சினிமாவை அறவே வெறுப்பவர் அல்ல. சூரியாகாந்தி படத்தின் 100வது நாள் விழாவில் கூடஅவர் கலந்து கொண்டார். அந்த விழாவில் அவர் தலைமை வகித்து உரையாற்றி இருக்கிறார். அந்த உரையில்உள்ளபடி தொடர்ந்து படங்கள் வந்திருக்குமானால், வருமேயானால் அந்தப் படங்களை யாரும் வெறுக்கமாட்டார்கள்.

    என் தமிழர் படமெடுக்க ஆரம்பஞ் செய்தார்
    எடுத்தார்கள் ஒன்றிரண்டு பத்துநூறாக
    ஒன்றேனும் தமிழர் நடையுடை பாவனைகள்
    உள்ளதுவாய் அமைக்கவில்லை, உயிர் உள்ளதில்லை!
    ஒன்றேனும் தமிழருமை உணர்த்துவதாயில்லை.

    வடநாட்டார் போன்ற உடை, வடநாட்டார் மெட்டு
    மாத் தமிழனில் நடுவினிலே தெலுங்கு கீர்த்தனங்கள்
    வட மொழியில் ஸ்லோகங்கள்
    ஆங்கிலப் பிரசங்கம் வாய்க்குவரா இந்துஸ்தான் ஆபாச நடனம்
    அடையும் இவை அனைத்தையும் கழித்துப் பார்க்குங்கால்

    அத்திம்பேர், அம்மாமி எனுத் தமிழ்தாம் மீதம்! என்று புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பாடியது போல்தான் படங்கள்இருந்தன. அதனால்தான் தந்தை பெரியார் திரைப்படங்களை வெறுத்து ஒதுக்கினார்.

    பெரியார் அவர்கள் எனக்கு, ஆருயிர் இளவல் தமிழர் தலைவர் கி.வீரமணி ஆகியோருக்கு ஆசானாக இருந்தார்.நாம் அவரை இன்றைக்கு இழந்திருக்கிறோம் என்றால், நாங்கள் இரண்டு பேரும் இன்றைக்கு இருக்கிறோம்.நாங்கள் இருப்பது, என்னைப் பொருத்தவரையில், அவரைப் பொறுத்தவரையில், இரண்டு பேரும் எண்ணிக்கொண்டிருக்கிறோம், பெரியாருடைய புகழைப் பரப்பத்தான் இயற்கை எங்கள் இருவரையும் விட்டுவைத்திருக்கிறது என்ற அந்த நம்பிக்கையோடு இருக்கிறோம்.

    இங்கே பெரியார் ஆட்சி நடக்கிறது என்று குறிப்பிட்டார்கள். பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும் இணைந்துநடத்துகின்ற ஆட்சியை நிச்சயமாக நான் நடத்துவேன். அதற்கு நீங்கள் (கி.வீரமணி) கீ யாக இருங்கள்.ஏனெனில் நீங்கள்தான் கீ. வீரமணி ஆயிற்றே என்றார் கருணாநிதி.

    நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன் பேசுகையில், பெரியார் வேடத்தில் நடிக்க சிவாஜி கணேசன் ஆசைப்பட்டார்.ஆனால் அது அவருக்கு வாய்க்கவில்லை. அது சத்யராஜுக்குக் கிடைத்துள்ளது. எவ்வளவு பெரிய பெருமை!

    அற்புதமான இந்த வாய்ப்பு கிடைத்துள்ளதால், இந்தப் படத்திற்காக சத்யராஜ் பட்ட பாடெல்லாம் தகும். ஆனால்இதன் மூலம் வருமானத்தை எதிர்பார்க்க முடியாது. பெரியார் கருத்துக்களைச் சொல்லும்போது நஷ்டம்தான்ஏற்படும்.

    நான் கி.வீரமணியை 4 .றை சந்தித்திருக்கிறேன். அதன் பிறகு சந்திக்க முடியவில்லை. அதற்கு நான் செய்யும்தொழில் ஒரு காரணம். அவருக்கே முட்டைகளை வீசுகிறார்கள் என்றால், நமக்கு என்ன வீசுவார்கல் எனஎண்ணிப் பார்த்தேன். அடிக்கடி சந்திக்க முடியவில்லை.

    நான் பெரியார் தொண்டராக மாற வழி விட்ட எனது குடும்பத்துக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.சமீபத்தில் எனக்கு கேரளாவில் சிறந்த பகுத்தறிவாளருக்கான விருது கொடுத்தார்கள். நடிப்பின் மூலம் எனக்குக்கிடைத்த பாராட்டு, பட்டங்களை விட இந்த விருதை நான் பெரிதாக கருதுகிறேன்.

    எனக்கு தமிழ் வாத்தியார் முதல்வர் கருணாநிதிதான். ஆத்திகம் பேசுபவர்கள் வசதியானவர்கள் என்பதுபோலவும், நாத்திகம் பேசுகிறவர்கள் நாசமாகப் போனவர்கள் என்றும் ஒரு கருத்து இருக்கிறது. எனக்குத் தெரிந்துநாத்திகம் பேசுகிறவர்கள் நேர்மையானவர்களாக இருக்கிறார்கள் என்றார் கமல்.

    நிகழ்ச்சியில் நடிகர் சத்யராஜ், கவிஞர் வைரமுத்து, கி.வீரமணி, நடிகை குஷ்பு, ஒளிப்பதிவாளர் தங்கர்பச்சான்உள்ளிட்டோரும் பேசினர். கமல்ஹாசன், சத்யராஜ், குஷ்பு ஆகியோர் கருப்பு உடை அணிந்து நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X