»   »  பெரியார் படத்துக்கு நிதி-எதிர்த்து வழக்கு!

பெரியார் படத்துக்கு நிதி-எதிர்த்து வழக்கு!

Subscribe to Oneindia Tamil

சத்யராஜ் நடிக்கும் பெரியார் படத்திற்கு தமிழக அரசு ரூ. 95 லட்சம் நிதியுதவிசெய்வதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

சென்னையைச் சேர்ந்த டிராபிக் ராமசாமி என்பவர் இதுதொடர்பாகஉயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பொது நல மனுவில் கூறியிருப்பதாவது:

நாட்டில் குடிநீர், கழிப்பறை, சுகாதாரம், கல்வி உள்ளிட்ட பல அடிப்படைதேவைகளைப் பூர்த்தி செயய முடியாத பலர் உள்ளனர். இதை நிவர்த்தி செய்யாமல்,மக்கள் வரிப்பணத்திலிருந்து பெரியார் படத்திற்கு நிதியுதவி செய்வது நியாயமல்ல.

இப்படத்திற்கு நிதியுதவி வழங்கினால் வகுப்புப் பிரச்சினை ஏற்படும். ராஜாஜி படம்போன்றவற்றுக்கு ஏன் நிதியுதவி அளிக்கக் கூடாது என்று மைலாப்பூர் எம்.எல்.ஏ.எஸ்வி.சேகர் சட்டசபையில் கேட்டார். இதற்கு சட்டசபையில் கடும் எதிர்ப்புதெரிவித்தனர்.

இதுபோன்ற படங்களுக்கு பெரும் தொகையை தமிழக அரசு வழங்கக் கூடாது.எனவே தமிழக அரசின் இந்த முடிவுக்கு தடை விதிக்க வேண்டும்.

எதிர்காலத்திலும், இதுபோல தனிப்பட்ட நபர்களுடைய வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்கும்போதுஅவற்றுக்கு அரசு சார்பில் நிதியுதவி அளிக்கவும் தடை விதிக்க வேண்டும் என்று கோரியுள்ளார் ராமசாமி.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil