twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சத்யராஜ் நடித்த மிக முக்கியமான படம் .... சினிமா வாழ்க்கையில் தனக்கு கிடைத்த வரம்

    |

    சென்னை: சித்தாந்தங்களை மகுடமாக வைத்து கொண்டு, எந்த வித மதம், ஜாதி, சாஸ்திரம்,கடவுள், சம்பிரதாயம், மூடநம்பிக்கைகள் தன்னை தீண்ட விடாமல் பார்த்து கொண்ட உலகின் மிக சிறந்த ஒரு தலைவராக வாழ்ந்தவர் பெரியார்.

    இன்று அவருக்கு 142வது பிறந்தநாள். இந்த நாளை முன்னிட்டு அவர் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்ட பெரியார் என்கிற சத்யராஜ் நடித்த படத்தை பற்றி பலரும் சமூக வலைதளங்களில் பேசி வருகிறார்கள் .

    எத்தனையோ பயோ பிக் படங்கள் தமிழ் சினிமாவில் வந்து உள்ளது . பெரியார் பற்றி படம் எடுக்க பலரும் தயங்கிய நிலையில் இந்த முடிவை தைரியமாக எடுத்து வெற்றியும் கண்டனர். இந்த படத்தின் ஒட்டு மொத்த குழுவிற்கும் இன்று வரை பாராட்டு மழை வந்து கொண்டு தான் இருக்கிறது.

     இன்று கூட தூங்கி எழுந்தவுடன் அவர் நினைவுதான் வந்தது.. வடிவேல் பாலாஜி குறித்து கண்கலங்கிய விஜே ரம்யா! இன்று கூட தூங்கி எழுந்தவுடன் அவர் நினைவுதான் வந்தது.. வடிவேல் பாலாஜி குறித்து கண்கலங்கிய விஜே ரம்யா!

     படைப்பின் விதை வீசியவர்

    படைப்பின் விதை வீசியவர்

    பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து 2007 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட தமிழ்த் திரைப்படம் பெரியார் ஆகும். இப்படத்தில் பெரியாராக சத்யராஜ் நடித்தார். ஞான ராஜசேகரன் இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தை உருவாக்குவதற்கு 95 இலட்சம் தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டது என்பது கூடுதல் தகவல். இப்படத்தை லிபர்டி கிரியேஷன்ஸ் சார்பில் கோ.சாமிதுரை தயாரித்தார்.இப்படத்தில் மணியம்மையாக நடிகை குஷ்பூ மற்றும் நாகமாலாக ஜ்யோதிர்மயி . இவர்களுடன் ஸ்வர்ணமால்யா மற்றும் வெண்ணிறாடை நிர்மலா ஆகிய பிரபல நடிகர்கள் நடித்துள்ளார்கள் . இப்படத்தை எழுதி இயக்கியது ஞான ராஜசேகரன் மற்றும் இசை அமைத்தது வித்யாசாகர்

     கடவுள் பெயரால்

    கடவுள் பெயரால்

    இப்படத்தில் ஈ வே ராமசாமி ஆகிய சத்யராஜ் கதாபாத்திரத்துக்கு மிகவும் மெனக்கெட்டு நடித்தார் . காசிக்கு பயணம் செய்து இந்நாட்டின் பல் வேறு மத நம்பிக்கைகளை அறிந்து பெரியாரின் வாழ்க்கையில் நடந்த சில முக்கிய நிகழ்வுகள் மட்டுமே இந்த படத்தில் காட்சி செய்ய பட்டு உள்ளது. இப்படத்தில் அவர் ஜாதி ஒடுக்குமுறை, மூடநம்பிக்கைகள்,பெண் ஒடுக்குமுறை மற்றும் கடவுள் பெயரால் செய்யப்படும் அரசியலை தனி மனிதனாய் எதிர்த்து போராடுவார்.

     ஓசை எங்கும் சூழும்

    ஓசை எங்கும் சூழும்

    காசிக்கு போய் வந்த பிறகு பெரியார் அவரது தந்தை வியாபாரத்தை பார்த்து கொண்டு ஈரோடின் முனிசிபாலிட்டியில் பணிபுரிய தொடங்கினார். அப்பொழுது உள்ள சமுதாயம் , அது செய்த சூழ்ச்சியும் அரசியலையும் எடுத்து பேசி இருப்பார் பெரியார். சாஸ்திரம் என்கிற பெயரில் பெண்ணை கொடுமை படுத்துவது, மதம் என்கிற பெயரில் மனிதனை ஒடுக்குபவது, சுதந்திரம் என்கிற பெயரில் மடத்துக்குள்ளையே பிரிவினை கொண்டு வருபவது , போன்ற காட்சிகளில் இச்சமுதாயத்தை எதிர்த்து போராடுவார் சத்யராஜ். இந்த பெரியார் கதாபாத்திரத்தில் அவ்வளவு நேர்த்தியாக நடிப்பை காட்டியிருப்பார் .

     பெரியார்காக அவர் காட்டிய கண்ணியம்

    பெரியார்காக அவர் காட்டிய கண்ணியம்

    நடிகர் மற்றும் முன்னாள் தமிழக முதல்வர் dr.mgr மிகவும் ஆசை பட்ட கதாபாத்திரம் பெரியார் கதாபாத்திரம் தான். அச்சூழலில் அவரால் இப்படத்தை நடிக்க முடியவில்லை. இதை ஒரு பேட்டியில் சத்யராஜ் கூறிருப்பார். அந்த பாக்கியம் தனக்கு கிடைத்தது மிகவும் பெருமை மற்றும் பாக்கியசாலி என்று கூறி உள்ளார். நாம் எல்லோருக்கும் சத்யராஜ் ஒரு பெரியார் பக்தன் என்று நன்கு தெரியும், அதை அவர் அப்படத்திற்கு காட்டிய ஆர்வம் மற்றும் நிஜத்திலும் தன்னுடைய கொள்கைக்கு உண்மையாய் இருப்பதே ஒரு நல்ல சாட்சி.கொள்கை ரீதியாய் பொருத்தம் கொண்ட சத்யராஜ் இப்படத்தில் தன்னுடைய அசுர நடிப்பில் பெரியாராக அசத்தியிருப்பார்.

     தேசிய விருது

    தேசிய விருது

    இப்படத்தில் மணியம்மையாக நடித்த குஷ்பூ படப்பிடிப்பிற்கு மூன்று மாதம் முன்பே பெரியார் மற்றும் அவருடைய புத்தகங்கள் படித்து தன்னை அக்கதாபாத்திரத்துக்காக பொருத்தி கொண்டார். இப்படத்தில் உள்ள திராவிட கொள்கை கொண்ட வசனங்கள் மட்டும் கருத்துகள் ஈட்டியாக மக்கள் மீது பாய்ந்தது. வித்யாதசாகரின் இசை அப்படத்தை வேறொரு கோணத்திற்கு தூக்கி கொண்டு சென்றது. இப்படம் வசூலில் மிகவும் நன்றாக செயல் பட்டதா என்பது கேள்வி குறி தான் இருப்பினும் இப்படம் 2007 ஆண்டுக்கான சிறந்த படத்திற்கான தேசிய விருதும் பெற்றுள்ளது.

     மக்கள் கொடுத்த ஆதரவு

    மக்கள் கொடுத்த ஆதரவு

    இப்படத்தை திமுக ஆட்சியில் உள்ள போது எடுக்க பட்டது , ஏனெனில் இப்படத்தை கலைஞர் டிவி வாங்கிக்கொண்டது. இப்படத்தில் பெரியார் காந்தியை தாக்கி பேசியது காங்கிரஸ் ஆதரவாளர்களை கோபம் அடைய செய்தது. சிலபல எதிர்ப்புகள் இருந்தாலும் தமிழ்நாட்டின் திராவிட தந்தைகாக மக்கள் கொடுத்த ஆதரவு எல்லா குழப்பங்களையும் தாண்டி மிக எழிதில் ரீலீஸ் செய்ய பட்டு இன்று வரை இந்த படம் கொண்டாட படுகிறது . இன்று பெரியார் பிறந்தநாள் என்பதினால் பலரும் இந்த படத்தின் காட்சிகளை சமூக வலை தளங்களில் அதிகமாக ஷேர் செய்து வருகின்றனர் .

    English summary
    Periyar is one of the bio pic movie which is been widely celebrated by periyar fans . since his birthday is been celebrated in many places of tamil nadu , the huge fan following for the movie periyar is been shared by many social networks and many scenes going viral .
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X