கத்தி, புலிப்பார்வையை பெரியார் திராவிடர் கழகம் ! - கோவை ராமகிருஷ்ணன்
கத்தி, புலிப்பார்வை போன்ற ஈழ விரோதிகளின் படங்களை தந்தை பெரியார் திராவிடர் கழகம் கடுமையாக எதிர்க்கும். வெளிவர விடாது என அந்த அமைப்பின் தலைவர் கோவை ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.
தந்தை பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கோவை ராமகிருஷ்ணன் சமீபத்தில் அளித்துள்ள ஒரு வீடியோ பேட்டியில், "மகிந்த ராஜபக்சே, கலாச்சாரம் மற்றும் வணிகம் மூலம் தமிழகத்தில் கால் பதிக்க முயற்சிக்கிறார். அதற்கு இங்கிருக்கும் சிலரே உதவி வருகின்றனர். இதனை தமிழீழ ஆதரவு அமைப்புகள் ஒருபோதும் அனுமதிக்காது.

பாலகன் பாலச்சந்திரனை 'குழந்தைப் போராளி' போல தவறாக காட்டியுள்ளனர் புலிப்பார்வை படத்தில். அந்தப் படத்தை வெளியிடும் முயற்சி தொடர்ந்தால், அதை எதிர்த்து தந்தை பெரியார் திராவிடர் கழகம் கடும் போராட்டங்களை முன்னெடுக்கும்.
எங்கள் 2 லட்சம் மக்களைக் கொன்ற ராசபக்சேவின் கூட்டாளியான லைக்கா நிறுவனர் தயாரிக்கும் 'கத்தி' திரைப்படத்தை வெளியிட அனுமதிக்க மாட்டோம்.
இந்த போராட்டத்தை முன்னெடுத்து போராடும் மாணவர் இயக்கங்களுக்கு, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் முழ ஆதரவு இருக்கும்," என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











