twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பெரியார் சிலை விவகாரம்..முன் ஜாமீன் மனு தள்ளுபடி..கைதாவாரா கனல் கண்ணன்?

    |

    சென்னை : பெரியார் சிலை விவகாரத்தில் கனல் கண்ணனின் முன் ஜாமீன் கோரி மனுவை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

    இந்து முன்னணி அமைப்பின் இந்துக்களின் உரிமை மீட்புப் பிரசார பயணம் நிறைவு விழாவை ஒட்டி சென்னை மதுரவாயலில் ஆகஸ்ட் 1ம் தேதி பொதுக்கூட்டம் நடைபெற்றது.

    அதில் பங்கேற்ற இந்து முன்னணி மாநில கலை பண்பாட்டு பிரிவின் செயலரும், சினிமா ஸ்டண்ட் மாஸ்டருமான கனல் கண்ணன், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் எதிரே உள்ள பெரியார் சிலையை உடைப்பது குறித்து பேசியிருந்தார்.

    கோச்சடையான் படத்திற்காக கடன் பெற்ற விவகாரம்: லதா ரஜினிகாந்த் மீதான வழக்கில் 3 பிரிவுகள் ரத்துகோச்சடையான் படத்திற்காக கடன் பெற்ற விவகாரம்: லதா ரஜினிகாந்த் மீதான வழக்கில் 3 பிரிவுகள் ரத்து

    கனல் கண்ணன் சர்ச்சை பேச்சு

    கனல் கண்ணன் சர்ச்சை பேச்சு

    கனல் கண்ணனின் இந்த பேச்சினுடைய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், சமூகத்தில் கலவரத்தை தூண்டும் வகையில் பேசிய அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் மாவட்ட செயலர் குமரன் சென்னை மாநகர காவல் ஆணையரகத்தில் புகார் அளித்தார். அதில், இரு பிரிவினரிடையே கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் பேசிய கனல்கண்ணன் மீதும், நிகழ்ச்சி ஏற்பட்டாளர்கள் மீதும் வழக்குபதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளிக்கப்பட்டிருந்தது.

    வழக்குப் பதிவு

    வழக்குப் பதிவு

    இந்த புகார் தொடர்பாக கனல் கண்ணன் மீது கலகம் செய்ய தூண்டிவிடுதல், அமைதியை சீர்குலைக்கும் வகையில் செயல்படுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.

    முன் ஜாமீன் மனு

    முன் ஜாமீன் மனு

    இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கனல் கண்ணன் மனுத் தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், தினமும் ஒரு லட்சம் பக்தர்களுக்கு மேல் தரிசிக்க வரும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் வாசலில், கடவுளை கொச்சைபடுத்தும் வகையிலான வாசகங்களுடன் வைக்கப்பட்டிருக்கும் சிலையும், அந்த வாசகங்களும் பக்தர்களின் மனதை புண்படுத்தும் வகையில் இருப்பதாலேயே அதை இடிக்க வேண்டுமென பேசியதாக குறிப்பிட்டுள்ளார்.

    சட்டத்திற்கு புறம்பானது இல்லை

    சட்டத்திற்கு புறம்பானது இல்லை

    தான் பேசியது இந்த நாட்டின் சட்டத்திற்கு புறம்பானது ஏதும் இல்லை என்றும், சிலையில் இருந்த வாசகங்கள் தான் இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட வேண்டிய குற்றம் என மனுவில் குறிப்பிட்டுள்ளார். கோவிலின் முன் அந்த சிலையை வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத காவல்துறை, தன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளதாக கனல் கண்ணன் தன் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

    Recommended Video

    Kanal Kannan கருத்துரிமையை பறிக்க DGP Sylendra Babu யார் ? | H.Raja *Politics | Oneindia Tamil
    கைதாவாரா

    கைதாவாரா

    இந்நிலையில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் கனல் கண்ணனின் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. இதனால் சினிமா ஸ்டண்ட் மாஸ்டருமான கனல் கண்ணன் எப்போது வேண்டுமானாலும் கைதாக வாய்ப்பு உள்ளது. மேலும், கனல் கண்ணன் இப்போது எங்கே இருக்கிறார் என்று தெரியாததால் அவரது செல்போன் சிக்னலை வைத்து போலீசார் தேடி வருவதாக கூறப்படுகிறது.

    English summary
    periyar statue issue kanal kannan has filed an anticipatory bail petition was dismissed by the first session court
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X