Vijay: பெரம்பூரில் விஜய் பிரச்சாரம் செய்ய அனுமதி மறுப்பு.. என்ன காரணம்?
சென்னை: எதிர்வரும் சட்டமன்ற பொதுத் தேர்தலில் தனது தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் வேட்பாளர்களை ஆதரித்து நடிகர் விஜய் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். இதற்காக மார்ச் 28ஆம் தேதியில் இருந்து சென்னை, பெரம்பூரில் இருந்து பிரச்சாரம் செய்ய முடிவெடுத்து, அனுமதி கேட்டு விண்ணப்பித்திருந்தனர். இப்படி இருக்கும்போது, நடிகர் விஜய்க்கு நாளை சென்னை பெரம்பூரில் பிரச்சாரம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டு அனுமதி வாங்க உள்ளதாக கூறப்படுகிறது.

நடிகர் விஜய் பெரம்பூர் தொகுதியில் போட்டியிடவுள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியானது. ஆனால் இதை தமிழக வெற்றிக் கழகம் உறுதிப்படுத்தவில்லை என்றாலும், அதை மறுக்கவில்லை. இது மட்டும் இல்லாமல் விஜய் பெரம்பூரில் இருந்து தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கவுள்ளதாக தகவல் வெளியானதும் விஜய் பெரம்பூரில் தான் போட்டியிடவுள்ளார் என்று பேச்சுக்கள் அதிகமானது.
தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் தேர்தல் பிரச்சார திட்டப்படி, மார்ச் 28ஆம் தேதி பெரம்பூரில் தொடங்கி தலைநகர் சென்னையில் மட்டும் சுமார் 5 தொகுதிகளில் பிரச்சாரம் செய்ய அனுமதி கேட்கப்பட்டிருந்தது. ஆனால் தேர்தல் ஆணையத்தில் சார்பில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதற்கு காரணமாக, விஜய்யின் பிரச்சார வாகனம் செல்லும் ரூட்டில் மாற்றம் செய்து கொடுக்க வேண்டும் என்று தெரிவித்தது மட்டும் இல்லாமல், காவல்துறையிடம் இருந்து ஆட்சேபனை இல்லை என்ற சான்றிதழை வாங்கி கொடுக்கும் படியும் அறிவுருத்தி உள்ளதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











