புதுச்சேரி கேபிளில் ராவணன் ..ஒருவர் கைது!

இந்தப் படம் உலகமெங்கும் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் கடந்த வெள்ளியன்று ரிலீசானது. ஆனால் வெளியான அன்றே இன்டர்நெட்டில் இதன் சுமாரான பிரதி வந்துவிட்டது. இப்போது முழு படமும் இன்டர்நெட்டில் ஓடுகிறது.
சேலம் பகுதிகளில் இந்த படத்தை இன்டர்நெட்டில் இருந்து செல்போன்களில் டவுன்லோடு செய்து கொடுக்கிறார்கள். இதற்காக ரூ.100 வரை கட்டணமாக வசூலிக்கின்றனர். சென்னையிலும் செல்போன்களில் ராவணம் படம் முழுவதையும் பரப்பியுள்ளனர்.
புதுச்சேரியில் கேபிள் டி.வியில் ராவணன் படம் ஒளிபரப்பப்பட்டது. சக்தி டெலிவிஷன் என்ற கேபிள் டி.வியில் இந்தப் படம் ஒளிபரப்பப்பட்டதாக தகவல் கிடைத்தது. சென்னையில் உள்ள ராவணன் தயாரிப்பு நிறுவனத்துக்கு இவ்விஷயத்தை ஒருவர் தொலைபேசியில் தெரிவித்தார்.
உடனடியாக இதுபற்றி உருளையன்பேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. கேபிள் டி.வியில் ராவணன் படத்தின் இந்தி பதிப்பை ஒளிபரப்பிய கார்த்திகேயன் என்பவரை கைது செய்தனர்.
கேபிள் டி.வி. அலுவலகத்தில் இருந்த ஒளிபரப்பு சாதனங்களையும் பறிமுதல் செய்து, சம்பந்தப்பட்ட நபர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











