twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஆளுமைகள் கமல்-டாம்குரூஸ்...அட இருவருக்கும் இடையே இவ்வளவு ஒற்றுமைகளா?

    Hollywood Tom Cruise Tamil Tom Cruise Kamal A View, The interesting thing, there are many similarities between the two, ஹாலிவுட் டாம் குரூஸ் தமிழக டாம் குரூஸ் கமல் ஒரு பார்வை, இருவருக்குள்ளும் உள்ள அநேக ஒற்றுமைகள்,

    |

    சென்னை: இந்தியாவின் முக்கிய நடிகர்களில் ஒருவர் கமல்ஹாசன், ஹாலிவுட்டின் பிரபல நடிகர் டாம் குரூஸ். இருவருக்குள்ளும் அநேக ஒற்றுமையான விஷயங்கள் இருக்கிறது.

    இருவரும் சினிமாவின் அத்தனை அம்சங்களையும் கற்றுக்கொண்டு அதை செயல்படுத்தி வெற்றிக்கண்டவர்கள். இருவரின் பிரபலமான இரண்டு பாகங்கள் படங்கள் ஒரே ஆண்டில் வெளியாகிறது.

    விக்ரம் இரண்டு பாகங்களும், டாப் கன் இரண்டு பாகங்களும் ஒரே ஆண்டில் வெளியானது, வெளிவருகிறது. இரண்டும் கேன்ஸ் பட விழாவில் பங்கேற்கும் படமாக உள்ளது.

    ரஜினிக்கும், கமலுக்கும் இதுதான் வித்தியாசம்... இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் என கூறியுள்ளார் தெரியுமா!ரஜினிக்கும், கமலுக்கும் இதுதான் வித்தியாசம்... இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் என கூறியுள்ளார் தெரியுமா!

    கேன்ஸ் பட விசாவில் கமல்-டாம்குரூஸ்

    கேன்ஸ் பட விசாவில் கமல்-டாம்குரூஸ்

    உலக அளவில் நடைபெறும் கேன்ஸ் பட விழாவில் நடிகர் கமல்ஹாசன் கலந்து கொண்டுள்ளார். அவரது விக்ரம் படத்தின் இரண்டாம் பாகம் படத்தின் போஸ்டர் படம் அங்கு வெளியிடப்படுகிறது. அது என்.எஃப்.டியில் விற்கும் புதிய முயற்சியில் முதன் முதலாக கமல் இறங்கியுள்ளார். இதேபோல் ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் இந்த விழாவில் கலந்து கொண்டுள்ளார். அவருக்கு மிகப்பெரிய வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரது டாப்கன் இரண்டாம் பாகமான டாப்கன் மேவ்ரிக் கேன்ஸ் பட விழாவில் திரையிடப்பட்டுள்ளது.

    ஒரே ஆண்டில் 1986 -ல் வெளியான விக்ரம், டாப் கன்

    ஒரே ஆண்டில் 1986 -ல் வெளியான விக்ரம், டாப் கன்

    இதில் வியக்கத்தக்க ஒரு ஒற்றுமை என்னவென்றால் விக்ரம் படம் கமல்ஹாசன் நடித்து 1986 ஆம் ஆண்டு மே மாதம் வெளியானது. விக்ரம் படத்தின் முதல் பாகம் 1986 ஆம் வருடம் கமலுக்கு மிகவும் பெயர் வாங்கிக் கொடுத்த படம் ஆகும். சுஜாதாவின் கதை, வசனத்தில் நவீன விஷயங்களை படம் பேசியது. மிகப்பெரும் மிசைல் ஒன்றை வெளிநாட்டுக்கு ஒரு கும்பல் கடத்திச் சென்று விடுகிறது. மனைவியை கொன்றவர்களை பழி வாங்கும் வெறியில் உள்ள ரா அதிகாரி கமல் மீண்டும் பணியில் இணைந்து மிசைலை மீட்கிறார். படத்தில் நவீன விஷயங்களை கமலஹாசன் பயன்படுத்தியிருப்பார்.

    இருவருக்கும் உள்ள அதிசய ஒற்றுமை

    இருவருக்கும் உள்ள அதிசய ஒற்றுமை

    தமிழ் திரைப்படங்களில் இது ஒரு முன்னோடி படமாகப் பார்க்கப்பட்டது. இந்தப் படம் 1986 ஆம் ஆண்டு வெளியான அதே ஆண்டு அதே மே மாதம்தான் டாம் குரூஸின் டாப் கன் படமும் ரிலீஸ் ஆனது என்பது சுவாரஸ்யமான ஒரு விஷயம். இந்த படமும் விமானம் சம்பந்தப்பட்ட ஒரு சாகசப் படமாகும். இந்த படம் வெளியான பின்னரே டாம் குரூஸ் யார் என்பது வெளி உலகிற்கு தெரிந்தது. ஹாலிவுட் உலகைத் தாண்டி மற்ற நாடுகளிலும் டாம் குரூஸின் புகழ் பரவியது.

    கேன்ஸ் விழாவில் இரண்டாம் பாகத்துக்காக வந்த கமல் டாம் குரூஸ்

    கேன்ஸ் விழாவில் இரண்டாம் பாகத்துக்காக வந்த கமல் டாம் குரூஸ்

    இதில் குறிப்பிட வேண்டிய இன்னொரு சுவாரசியமான அம்சம் தனது 1986 ஆம் ஆண்டு மே மாதம் வெளிவந்த தனது விக்ரம் படத்தின் போஸ்டரை என்.எஃப்.யில் வெளியிட கேன்ஸ் விழாவிற்கு கமல்ஹாசன் வந்துள்ளார். அதேபோன்று ஆயிரத்து 1986 ஆம் ஆண்டு வெளியான டாப்கன் படத்தின் இரண்டாம் பாகமான டாப்கன் மேவ்ரிக் படத்தை டாம் குரூஸ் திரையிட கேன்ஸ் விழாவிற்கு வந்துள்ளார். இந்த எப்படி நடந்தது என்று தெரியவில்லை ஆனால் சுவாரசியமான ஒற்றுமை கவனிக்கத்தக்கது.

    36 ஆண்டுகள் கழித்து ஒரே ஆண்டில் வெளியாகும் இரண்டாம் பாகங்கள்

    36 ஆண்டுகள் கழித்து ஒரே ஆண்டில் வெளியாகும் இரண்டாம் பாகங்கள்

    இருவரின் முதல் படத்தின் பாகம் ஒரே ஆண்டு ஒரே மாதம் வெளியானது, 36 ஆண்டுகள் கழித்து இரண்டாம் பாகமும் ஒரே ஆண்டில் வெளியாகிறது. இரண்டாம் பாகத்தை வெளியிட இருவரும் கேன்ஸ் பட விழாவிற்கு வந்துள்ளது ஒரு சுவாரஸ்யமான நிகழ்வு தான். இது தவிர கமல்ஹாசன் டாம் குரூஸ் இருவருக்கும் ஏகப்பட்ட ஒற்றுமைகள் உண்டு. நான்கு வயதில் குழந்தை நட்சத்திரமாக திரைத்துறையில் அறிமுகமான கமல்ஹாசன் தனது திறமையின் மூலம் படிப்படியாக சினிமாவின் பல்வேறு தொழில்நுட்பங்களை கற்றுக் கொண்டார். நடன உதவி இயக்குனராக பணியாற்றி, சிறிது சிறிதாக உயர்ந்து கதாநாயகனாக உயர்ந்தார்.

    கமல் போலவே சிறுவயதிலிருந்து உழைப்பால் உயர்ந்த டாம்

    கமல் போலவே சிறுவயதிலிருந்து உழைப்பால் உயர்ந்த டாம்

    டாம் குரூஸ் இதேபோல் நாடகங்களில் நடித்து பின்னர் சிறு சிறு வேடங்களில் திரைப்படங்களில் நடித்து பின்னர் டாப்கன் படம் மூலம் ஹீரோவாக பெரும் புகழ் பெற்ற கமல்ஹாசன் திரைப்படத்தில் அத்தனை நுணுக்கங்களையும் இன்று வரை கற்று அதனை அவரது படத்தில் புகுத்தி வருகிறார். தமிழ் திரையுலகில் மட்டுமல்ல இந்திய திரையுலகில் பல டெக்னாலஜிகளை முதன் முதலில் அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசன் எனலாம். அதேபோன்று ஸ்டண்ட் காட்சிகளில் டூப் போடாமல் நடிப்பதை வழக்கமாக கொண்டிருந்தார். பின்னர் நெருக்கமானவர்கள் சொன்ன அறிவுரையின் பேரில் அதை கமல் தவிர்த்துவிட்டார்.

    டூப் போடாத கமல்- டாம் குரூஸ்

    டூப் போடாத கமல்- டாம் குரூஸ்

    ஆனாலும் பல காட்சிகளில் கமல் டூப் போடாமல் நடித்து காலை உடைத்துக்கொண்டார், முகத்தில் கண்ணாடி கிழித்து தையல் போடப்பட்டது. சொல்லவே வேண்டாம் ஹாலிவுட் படத்தில் மயிர்க்கூச்செறியும் காட்சிகளில் உயிரைப் பணயம் வைக்கும் காட்சிகளில் டூப் போடாமல் நடிப்பது யார் என்று கேட்டால் டாம் குரூஸைத்தான் அனைவரும் சொல்வோம். அந்த அளவுக்கு டாம் குரூஸ் ஸ்டண்ட் காட்சிகளில் தானே சுயமாக நடிக்கும் தைரியமான நடிகர். அதேபோல் தனது படங்களில் புதுமைகளை புகுத்துவதில் டாம் குரூஸ் கமல்ஹாசனைப் போன்று முதன்மையானவர் இதுபோன்ற பல ஒற்றுமைகள் டாம் குரூஸ் கமல்ஹாசனுக்கும் உண்டு எனலாம்.

    உலக அளவில் சினிமாவைக் கொண்டுச் செல்லும் பிரபலங்கள்

    உலக அளவில் சினிமாவைக் கொண்டுச் செல்லும் பிரபலங்கள்

    தற்போது இருவரும் கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்டுள்ளனர் இருவரும் சினிமாவை உலக அளவில் கொண்டு செல்லும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். உருவ அளவிலும் இருவரும் மிதமான உயரம் கொண்டவர்கள் ஆனால் உயரமான நடிகர்கள் செய்யாததை செய்து காட்டிய பெருமைக்குரியவர்கள்.

    English summary
    Hollywood Tom Cruise Tamil Tom Cruise Kamal A View. The interesting thing is that there are many similarities between the two.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X