பெருசு படத்தை போலவே பிரபல தயாரிப்பாளருக்கு நடந்த சம்பவம்.. செய்யாறு பாலு இப்படி போட்டு உடைச்சிட்டாரே!
சென்னை: பெருசு திரைப்படம் தான் கோலிவுட்டின் டாக் ஆஃப் தி டவுனாக மாறியுள்ளது. ஆண்குறியை பற்றிய படத்தை எடுத்துவிட்டு விரசமே இல்லாத படம் குடும்பத்துடன் வந்து பாருங்க என எப்படித்தான் படக்குழுவினர் விளம்பரம் செய்கிறார்களோ தெரியவில்லை என மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு தனது யூடியூப் சேனலில் கொடுத்த விமர்சனத்தில் விளாசித் தள்ளியுள்ளார்.
அடல்ட் கமெடி படமாக நேற்று வெளியான பெருசு படத்தில் வைபவ் மற்றும் சுனில் ரெட்டி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அவர்களது தந்தை உயிரிழந்த பின்னரும் வெளியே சொல்ல முடியாத அளவுக்கு பப்பி ஷேம் விஷயம் ஏற்பட்டு விடுகிறது.

அதனை குடும்பமாக சேர்ந்து எப்படி மறைத்து இறுதிச்சடங்கு நடத்துகின்றனர் என்கிற திரைக்கதையை எடுத்துக் கொண்டு இளங்கோ ராம் இந்த படத்தை இயக்கியுள்ளார். படத்தை போடுவதற்கு முன்பாகவே இது முழுக்க முழுக்க கற்பனை கதை என்றும் பொறுப்பு துறப்பை இயக்குநர் போட்டுள்ளார். இந்நிலையில், 8 ஆண்டுகளுக்கு முன்னதாக தமிழ் சினிமாவின் பிரபல தயாரிப்பாளருக்கு இதே போன்ற ஒரு சம்பவம் நடந்தது என்றும் அதை வைத்துத் தான் இந்த கதையை இயக்குநர் உருவாக்கியிருக்கலாம் என அந்த மேட்டரை ஓபன் செய்துள்ளார் செய்யாறு பாலு.
உண்மை சம்பவமா?: பெருசு படத்தில் ஏன் அவருக்கு அந்த விஷயம் பெருசாக நிக்குது என்பதற்கு கடைசியில் ஒரு விஷயத்தை இயக்குநர் காட்டியிருப்பார். இந்நிலையில், அதே போன்ற ஒரு சம்பவம் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பாக தமிழ் சினிமாவில் நடந்துள்ளது என்கிற மேட்டரை கட்டவிழ்த்துள்ளார் செய்யாறு பாலு. பிரபல தயாரிப்பாளர் ஒருவர் இளம் பெண்ணுடன் நட்சத்திர ஹோட்டலில் பலான வேலைக்காக ரெடியான போது தான் அப்படியொரு பிரச்சனை ஏற்பட்டது எனக்கூறியுள்ளார்.

அந்த இடத்தில் ஸ்ப்ரே அடித்து: வயசான காலத்தில் வயாகர மாத்திரை போடுவது போல அயன் படத்தில் தொழிலதிபரை வைத்து ஒரு சீனை கே.வி. ஆனந்த் உருவாக்கியிருப்பார். நீண்ட நேரம் மன்மத லீலை நடத்த வேண்டும் என்பதற்காக மாத்திரிகளை உட்கொள்வது, ஸ்ப்ரே அடித்துக் கொள்வது என செயற்கையாக பல விஷயங்களை பணக்காரர்கள் செய்து வருகின்றனர். சில நேரங்களில் அதிகமாக செக்ஸ் வைத்துக் கொண்டால் உயிரே போய்விடும் சம்பவத்தை சூப்பர் டீலக்ஸ் படத்தில் காட்டியிருப்பார்கள். அதுபோல ஏடாகூடமான சம்பவங்களும் நடந்துவிடுகின்றன.
உயிருக்கு போராடிய தயாரிப்பாளர்: ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் சுக போகத்தை அனுபவிக்க அந்த இடத்தில் ஸ்ப்ரே எல்லாம் அடித்துக் கொண்டு தயாராக இருந்த பிரபல தயாரிப்பாளர் ஒருவருக்கு உயிரே போகும் அபாயம் ஏற்பட உசுரா? மானமா? என்கிற நிலை வர அவசர அவசரமாக அந்த இடத்தில் துணியால் மூடிக்கொண்டு வடபழனியில் உள்ள பிரபல மருத்துவமனைக்கு கொண்டு சென்று அட்மிட் செய்து சிகிச்சை பார்த்த பின்னர் தான் அவரை காப்பாற்றினார்கள் என செய்யாறு பாலு அந்த பிரபல தயாரிப்பாளரின் பெயரை ரிவீல் செய்யாமல் சம்பவத்தைக் கூறியுள்ளார். மேலும், பெருசு படம் பெரிய காமெடி படம் எல்லாம் இல்லை என்றும் அடிக்கடி அந்த இடத்தை அப்பட்டமாக காட்டி பார்க்க முடியாமல் எரிச்சலைத்தான் கிளப்பியுள்ளனர் என கடுமையாக விமர்சித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











