என்னடா பண்ணி வச்சிருக்கீங்க.. பெருசு டிரைலரை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்.. சாகும் போதும் சபலம்!

சென்னை: வைபவ், சுனில், நிஹாரிகா, சாந்தினி தமிழரசன், பால சரவணன், விடிவி கணேஷ் என நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள பெருசு படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைத்து வருகிறது. இந்த படத்துக்கு எதுக்கு ஏ சர்டிபிகேட் கொடுத்தாங்க என சமீபத்தில் வைபவ், சுனில், கார்த்திக் சுப்புராஜ், நிஹாரிகா உள்ளிட்டோர் ஜூம் காலில் பேசுவது போன்ற புரமோ வீடியோ வெளியாகி வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், படத்தின் டிரைலரை பார்த்த ரசிகர்கள் படத்துக்கு பெருசுன்னு சரியாத்தான் டைட்டில் வைத்துள்ளனர் என இயக்குநர் இளங்கோ ராமை பாராட்டி வருகின்றனர். இந்த படத்தின் வசூலும் ரொம்ப பெருசா வரணும்னு கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன.

Perusu movie Vaibhav Sunil

அப்பா இறந்து கிடக்க அந்த இழவு வீட்டில் இப்படியா பாஸ் காமெடி பண்ணுவீங்க என படத்தின் கதையை யோசித்ததற்கும் உருவாக்கியதற்கும் இளங்கோ ராமுக்கு ஏகப்பட்ட பாராட்டுகளும் கண்டனங்களும் குவிந்து வருகின்றன. அப்படி என்னதான் இந்த பெருசு படத்தில் அவர் பெருசா எடுத்து வச்சிருக்காருன்னு பார்ப்போம் வாங்க..

பெருசு டிரைலர்: வைபவ் மற்றும் அவருடைய சொந்த அண்ணனான நம்ம மாகாளி சுனில் ரெட்டின் கிங்ஸ்லி, விடிவி கணேஷ், பால சரவணன் உடன் இணைந்து அடித்துள்ள ஃபன் ஃபேமிலி ஃப்யூனரல் தான் இந்த பெருசு படம். அப்பா சாகும் போது என்னத்த பார்த்து தொலைத்தாரோ தெரியவில்லை அவருடைய மர்ம உறுப்பு பலான படம் பார்த்தது போல பெருசாக நிற்க அதை மூடி மறைக்க குடும்பமே சிரிக்கவும் முடியாமல் அழவும் முடியாமல் இழவு வீட்டில் செய்யும் சேட்டைகளை படமாக இயக்கியிருக்கிறார் இளங்கோ ராம்.

வைபவ், சுனில் வேறலெவல்: மருத்துவர்கள், சாமியார்கள், குடும்பத்தில் இருக்கும் சொந்தக்காரங்க என அனைவரிடமும் சென்று வைபவ் மற்றும் சுனில் தனது அப்பாவின் நிலைமையை மூடி மறைக்க சொல்லவும் முடியாமல், மெல்லவும் முடியாமல் தவிக்கும் காட்சிகளில் அட்டகாசமாக நடித்து ரசிகர்களை வயிறு வலிக்க சிரிக்க வைத்துள்ளனர்.

எடிட்டருக்கு பாராட்டுக்கள்: ஏ சான்றிதழ் குடும்ப படத்தை எடுத்துள்ள இயக்குநர் டிரைலரில் ஆபாசத்தை காட்டிவிடாமல் கட் செய்திருக்கும் விதம் சிறப்பாக உள்ளது. படத்தை எப்படி எடுத்து வைத்திருக்கிறார்களோ என்கிற ஆர்வத்தை அதிகளவில் தூண்டியிருக்கிறது. கண்டிப்பாக வரும் மார்ச் 14ம் தேதி தியேட்டர்கள் சிரிப்பலையில் தெறிக்கும் என்பது கியாரண்டி.

Perusu movie Vaibhav Sunil

அடுத்த காமெடி படம்: இந்த ஆண்டு இதுவரை வெளியான மத கஜ ராஜா, குடும்பஸ்தன், டிராகன் உள்ளிட்ட காமெடி படங்கள் வெற்றிப் பெற்ற நிலையில், அதே வரிசையில் அடல்ட் காமெடி படமாக உருவாகியுள்ள பெருசு திரைப்படம் பெருசா கல்லா கட்டுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். கான்செப்ட்டே புதுசா உள்ள நிலையில் படம் வசூல் குவிக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக கருதப்படுகிறது. அதே நேரம் அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது போல ஓவர்டோஸ் ஆகிவிட்டாலோ ரசிகர்கள் முகம் சுளிக்கும் அளவுக்கு படம் இருந்துவிட்டாலே தப்பிப்பது கஷ்டம் தான் இயக்குநர் இளங்கோ ராம் டிரைலர் அளவுக்கு படத்தையும் சுவாரஸ்யமாகவும் கலகலப்பாகவும் எடுத்து வைத்திருந்தால் மட்டுமே படம் தப்பிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X