பெருசு படத்தை வசூலில் துரத்தும் ரியோ ராஜின் ஸ்வீட் ஹார்ட்.. 5 நாட்களில் 2 படங்களின் வசூல் எவ்வளவு?

சென்னை: கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் இளங்கோ ராம் இயக்கத்தில் வைபவ் சுனில் ரெட்டி, நிஹாரிகா, சாந்தினி தமிழரசன், பால சரவணன், முனீஷ்காந்த், ரெடின் கிங்ஸ்லி, கருணாகரன், தீபா உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை வெளியான பெருசு திரைப்படம் திரையரங்குகளில் ரசிகர்களை ஓரளவுக்கு வரவழைத்து வருகிறது.

அடல்ட் காமெடி திரைப்படமான பெருசு திரைப்படம் பெரிதாக வசூல் வேட்டை நடத்தவில்லை என்றாலும் கடந்த வாரம் வெளியான படங்களில் அதிக வசூல் ஈட்டிய படமாக மாறி உள்ளது. கடந்த ஐந்து நாட்களில் பெருசு திரைப்படம் எந்த அளவுக்கு வசூல் செய்துள்ளது என்பதை இங்கே பார்க்கலாம்.

Perusu vs Sweetheart movie 5 days Box Office collection comparison reports are here

அதேபோல பெருசு படத்துக்கு போட்டியாக ரியோ ராஜ் நடித்துள்ள ஸ்வீட் ஹார்ட் திரைப்படமும் ஓரளவுக்கு வசூல் அள்ளி வருவது குறிப்பிடத்தக்கது. ஸ்வீட் ஹார்ட் படத்தை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தயாரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

பெருசு 5 நாள் வசூல்: உயிரிழந்த அப்பாவின் மெயின் பாயின்ட் பெரிதாக எழுந்து நிற்க அதை மறைத்து கெளரவமாக இறுதிச்சடங்கு செய்ய மகன்களான வைபவ் மற்றும் சுனில் ரெட்டி தங்கள் குடும்பத்துடன் சேர்ந்து கொண்டு போராடும் கதையில் இயக்குனர் இளங்கோ ராம் நகைச்சுவை கலந்து பல காமெடி நடிகர்களை நடிக்க வைத்து உருவாக்கியுள்ளார். முதல் நாளில் இருந்து அந்த படம் ஓரளவுக்கு வசூல் செய்து வந்த நிலையில், ஐந்து நாள் முடிவில் இதுவரை 2.5 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Perusu vs Sweetheart movie 5 days Box Office collection comparison reports are here

வசூலில் துரத்தும் ஸ்வீட் ஹார்ட்: ரியோ ராஜ், கோபிகா ரமேஷ் இயக்கத்தில் வெளியான ஸ்வீட் ஹார்ட் திரைப்படம் இளைஞர்களை கவரும் விதத்தில் உருவாக்கப்பட்ட நிலையில், ஆரம்பத்தில் போதுமான வரவேற்பு கிடைக்கவில்லை என்றாலும் அதன் பின்னர் வார இறுதி நாட்களில் கொஞ்சம் பிக்கப் ஆன நிலையில் ஐந்து நாட்கள் முடிவில் இதுவரை 2 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஓடிடி உரிமம் மற்றும் டிஜிட்டல் ரைட்ஸ் என யுவன் சங்கர் ராஜா போட்ட காசை எடுத்து விடுவார் என சினிமா வட்டாரத்தில் இந்த படத்துக்கும் பாசிட்டிவான பேச்சுக்கள் கிளம்பி வருகின்றன.

பெரிய வெற்றி இல்லை: இந்த ஆண்டு தொடங்கியதில் இருந்து தமிழ் சினிமாவில் பெரிய பாக்ஸ் ஆபிஸ் வெற்றி படம் என்றால் அது பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான டிராகன் திரைப்படம் மட்டும் தான். அஜித் குமார் நடித்து வெளியான விடாமுயற்சி திரைப்படம் 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்த நிலையிலும், படம் லாபகரமான படமாக இல்லை என்றும் தமிழ்நாட்டிலேயே பெரிய வசூல் வேட்டையை அந்த படம் நடத்தவில்லை என்கின்றனர். இந்த மாத இறுதியில் வெளியாக காத்திருக்கும் சீயான் விக்ரமின் வீர தீர சூரன் டிராகன் படத்தின் வசூலை முந்துமா? என்கிற கேள்விகள் தற்போது கோலிவுட்டை ஆக்கிரமித்துள்ளன. ஏப்ரல் 10ம் தேதி வெளியாகவுள்ள அஜித் குமாரின் குட் பேட் அக்லி திரைப்படம் நிச்சயம் மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்தும் என ஒட்டுமொத்த திரையுலகமும் காத்துக் கொண்டிருக்கிறது.

FAQs
ரியோ ராஜ் ஹீரோவாக நடித்த முதல் படம் எது?

நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா

Filmibeat Entertainment

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X