யாரடா இந்தப் பூவை இப்படி ஆக்கியது...!
சென்னை: இப்படி ஒரு பாட்டு பேசாமல் பேசினால் என்ற படத்தில் இடம் பெறுகிறது. ரொம்பச் சின்னக் கதையை வைத்துக் கொண்டு இந்தப் படத்தை உருவாக்கியுள்ளனராம்.
சிவமனோகரன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம்தான் இந்த பேசாமல் பேசினால்.
படத்தில் புதுமுகங்கள் அபிநய் ஜோசப் நாயகனாகவும், காயத்ரி நாயகியாகவும் நடித்துள்ளனர்.

படத்தோட கதை இதுதாங்க
படத்தோடு கதை ரொம்பச் சின்னதாக இருக்கிறது. அதாவது படத்தின் நாயகி செத்துப் போகிறார். இதையடுத்து கைதாகிறார் கதாநாயகன். அந்த வழக்கிலிருந்து அவர் எப்படி மீளுகிறார், என்ன ஆகிறார், உண்மையான குற்றவாளி என்பதுதான் படத்தோடு கதையாம்.

சில் சில் சின்றெல்லா
படத்தில் இளைஞர்களைக் கவரும் வகையிலான ஐட்டங்கள் நிறையவே இருக்கிறதாம். படத்தின் பாடல்களை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். முதல் பாட்டான சில் சில் சின்றெல்லாவில் ஹீரோயின் தன்னைத் தானே வர்ணித்துக் கொண்டு பாடுகிறாராம். இளைஞர்களுக்கு கிளுகிளுப்பூட்டும் பாட்டாக இது அமையுமாம்.

தாலி ஒன்னு கட்டிக்கிட்டு
இது ஒரு செமத்தியான குத்துப்பாட்டாம். சிறந்த குத்துப்பாட்டாக அமைந்திருப்பதாக படக் குழுவினரே சிலாகித்துச் சொல்கிறார்கள். நாயகனின் நண்பர்கள் குடித்து விட்டு ஜாலியாகப் பாடும் பாடலாம். கடலூர் ஜோதியும், வேல்முருகனும் இந்தக் குத்துப் பாட்டுக்கு குரல் கொடுத்துள்ளனர்.

யாரடா இந்தப் பூவை இப்படி ஆக்கியது
இதுதாங்க ஹைலைட் பாடல்.. சீரழிக்கப்பட்ட கதாநாயகிக்கு நடந்த கொடுமைளை சித்தரிக்கும் பாடலாம் இது. மாணிக்கவிநாயகம் பாடியுள்ளார். மணி அமுதவன் பாடலைஇயற்றியுள்ளார்.

கேமராமேன் டைரக்டர் - பாடலாசிரியர் இசையமைப்பாளர்
படத்தின் இயக்குநரான சிவமனோகரன், அடிப்படையில் கேமராமேனாம், அதேபோல இசையமைப்பாளரான துரைராஜன் பாடலாசிரியராம். இந்தப் படத்தில் இருவரும் மாறிப் பணியாற்றியுள்ளனராம்.


Click it and Unblock the Notifications