twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஹீரோக்களை விட விலங்குகளை நம்பும் டைரக்டர்கள்...பழைய காலத்திற்கு திரும்புகிறதா தமிழ் சினிமா?

    |

    சென்னை : சமீப காலமாக தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள், டிவி பிரபலங்களை ஹீரோ-ஹீரோயினாக வைத்து படம் எடுப்பது அதிகரித்து வருகிறது. இதை பார்த்து பலரும் தமிழ் சினிமாவில் ஹீரோக்களுக்கு பஞ்சம் வந்து விட்டதா என சந்தேகம் வர துவங்கி விட்டது.

    ஹீரோ - ஹீரோயின்களுக்கு பஞ்சமா , கதைக்கு பஞ்சமா என்ன காரணம் என பலர் கேட்டாலும், இதில் கவனிக்கப்பட வேண்டியது ஹீரோ - ஹீரோயின்கள் அல்ல. புதிய ஹீரோ-ஹீரோயின்களை அறிமுகம் செய்வது இதன் நோக்கமல்ல. ஹீரோ அந்த நடிகர் என சொல்லப்பட்டாலும், நன்று கவனித்து பார்த்தால் படத்தின் கதை, அந்த ஹீரோவின் கேரக்டரை மையப்படுத்தியதாக இருப்பதில்லை.

    “ஊ சொல்றியா மாமா “ பாட்டை கட்டாயப்படுத்தி பாடவைத்தனர்… ஆண்ட்ரியா மனம் திறந்த பேட்டி !“ஊ சொல்றியா மாமா “ பாட்டை கட்டாயப்படுத்தி பாடவைத்தனர்… ஆண்ட்ரியா மனம் திறந்த பேட்டி !

    அதிகரிக்கும் மிருகங்கள் படங்கள்

    அதிகரிக்கும் மிருகங்கள் படங்கள்

    ஏதோ ஒரு மிருகத்தை மையமாக வைத்தே படம் எடுக்கப்படுகிறது. சமீப காலமாக தமிழ் சினிமாவில் வரும் குறைந்த பட்ஜெட் படங்களை நன்கு கவனித்தால் இது தெரியும். நாய் சேகர், குதிரைவால், ஓ மை டாக் ஆகிய படங்களே இதற்கு உதாரணம். நாய், குதிரை போன்றவை மையமாக வைத்து தான் படத்தின் கதை அமைக்கப்பட்டிருக்கும்.

    எல்லாம் ஒரே கதை தான்

    எல்லாம் ஒரே கதை தான்


    மிருகங்களுக்கும், மனிதர்களுக்கும் இடையே ஏற்படும் உறவு அல்லது அந்த மிருகத்தால் அந்த மனிதருக்கு ஏற்படும் சிக்கல், அதில் இருந்து அவர் எப்படி மீண்டு வருகிறார் இது தான் படத்தின் கதையாக இருக்கும். விவசாயி பற்றிய கதை என்று சொல்லி எடுத்தாலும் கடைசி விவசாயி படத்திலும் மயில்களை வைத்தே பாதிக்கும் மேற்பட்ட கதையை நகர்த்தி இருப்பார்கள். அடுத்ததாக சூர்யா நடிக்கும் வாடிவாசல் படமும் ஜல்லிக்கட்டு காளைகளை மையப்படுத்தியே எடுக்கப்பட உள்ளது.

    பழைய காலம் திரும்புதா

    பழைய காலம் திரும்புதா

    வெவ்வேறு விதமாக சொல்லப்பட்டாலும் கதை என்னவோ ஒன்று தான். பழைய ராம நாராயணன் படங்களில் தான் யானை, நாய், குதிரை, குரங்கு ஆகியவற்றை மையமாக வைத்து படம் எடுத்தார்கள். அதே காலம் தமிழ் சினிமாவில் மீண்டும் திரும்புகிறதோ என நினைக்க தோன்றுகிறது. இதற்கு காரணம் பெரிய நடிகர்களை வைத்து படம் எடுத்தால் லட்சங்கள் அல்லது கோடிகளில் சம்பளம் கொடுக்க வேண்டும். பெரிய பட்ஜெட்டில் படம் எடுத்தாலும், கதை, திரைக்கதை, நடிகர்கள் என அனைத்தும் சரியாக அமைய வேண்டும்.

    Recommended Video

    இதுவரைக்கும் சினிமாவுல 5 பைசா பாக்கெட்ல எடுத்துட்டு போனது இல்ல! | R K SURESH | ADDRESS
    உதாரணம் இந்த படங்கள் தான்

    உதாரணம் இந்த படங்கள் தான்

    ஹாலிவுட்டில் எடுக்கப்பட்டு வசூலை குவித்த தி லைன் கிங் போன்ற படங்களும் இதற்கு காரணம். கால்ஷீட் போன்ற எந்த பஞ்சாயத்திலும் சிக்காமல் மிருகங்களை வைத்தே படம் எடுத்து, பணம் பார்த்து விடலாம் என்பதும் சிலரின் நோக்கமாக உள்ளது. டைரக்டர் ராஜமெளலி ஈயை மையமாக வைத்து எடுத்த நான் ஈ படமும் இதற்கு மிகப் பெரிய உதாரணம்.

    English summary
    In recent days, pet or animal based movies are increased in tamil cinema. Fans asked did director belive animals more than heroes. The animal based movies had a same type of stories. Meanwhile directors and producers belived that type of movies are definetly attract kids.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X