போய் வா ஜியா... பேடாவின் கண்ணீர் அஞ்சலி

By Sudha

மும்பை: தற்கொலை செய்து கொண்ட நடிகை ஜியா கானுக்கு பேடா அமைப்பு இரங்கல் தெரிவித்துள்ளது. பேடாவுக்காக குரல் கொடுத்த ஜியா கானை மறக்க முடியாது என்றும் அது தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

வளர்ந்து வந்த நடிகையான ஜியா கான் மும்பையில் திடீரென தற்கொலை செய்து கொண்டார். அவரது மறைவுக்கு பாலிவுட்டைச் சேர்ந்த பலரும் அதிர்ச்சியும், இரங்கலும் தெரிவித்துள்ளனர்.

அதேபோல பேடா எனப்படும் பிராணிகள் வதை தடுப்பு அமைப்பும் இரங்கல் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக பேடா வெளியிட்டுள்ள செய்தி...

மிகச் சிறந்த தோழி

மிகச் சிறந்த தோழி

பேடாவின் மிக்ச சிறந்த தோழி ஜியா கான்.அவரது மறைவு எங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இழந்து விட்டோம்

இழந்து விட்டோம்

பேடாவும், விலங்குகளும் நல்ல தோழியை இழந்து நிற்கிறோம். விலங்குகளுக்கு எப்போதெல்லாம் சிக்கல் வருகிறதோ அப்போதெல்லாம் உதவிக் குரல் கொடுத்து ஓடி வந்தவர் ஜியா கான்.

பறவைகளுக்காக குரல்

பறவைகளுக்காக குரல்

பறவைகளுக்காக குரல் கொடுத்தவர். விலங்கியல் பூங்காவில் கூண்டுகளில் விலங்குகள், பறவைகலை அடைத்து வைப்பதை எதிர்த்து வந்தவர்.

பூனைகளுடன் சந்தோஷ வாழ்க்கை

பூனைகளுடன் சந்தோஷ வாழ்க்கை

தான் மீட்ட பல்வேறு பூனைகளை தனது மும்பை வீட்டில் வைத்து பராமரித்து வந்தார். மிகவும் அன்பானவர் ஜியா கான்.

என்றென்றும் நினைவு கூருவோம்

என்றென்றும் நினைவு கூருவோம்

ஜியா கானை பிராணிகள் நல விரும்பிகள் என்றென்றும் நினைவில் வைத்திருப்பார்கள். அவரது அழகான இதயம், பிராணிகளுக்காகவும், பறவைகளுக்காகவும் துடித்தது. அதை என்றும் மறக்க முடியாது என்று பேடா கூறியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X