twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    என்னடா பொன்னியின் செல்வனுக்கு வந்த சோதனை... இப்படியா போய் சிக்குவாங்க ?

    |

    ஐதராபாத் : மணிரத்னம் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக தயாராகி வரும் பொன்னியின் செல்வன் படத்தின் ஷுட்டிங் 2 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. முதலில் வெளிநாட்டில் துவங்கப்பட்ட படத்தின் ஷுட்டிங், லாக்டவுன் காரணமாக நிறுத்தப்பட்டது.

    நீண்ட இடைவெளிக்கு பிறகு துவங்கப்பட்ட ஷுட்டிங் ஐதராபாத், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் நடத்தப்பட்டது. ஐதராபாத்தில் நீண்ட நாட்களாக நடத்தப்பட்ட ஷுட்டிங்கில் முக்கியமான காட்சிகள் பலவும் எடுக்கப்பட்டுள்ளது.

    கோட்டைசுவருக்கு மத்தியில் இரண்டு ஜாம்பவான்கள்… பொன்னியின் செல்வன் ஷூட்டிங் ஸ்பாட் போட்டோ !கோட்டைசுவருக்கு மத்தியில் இரண்டு ஜாம்பவான்கள்… பொன்னியின் செல்வன் ஷூட்டிங் ஸ்பாட் போட்டோ !

    மத்திய பிரதேச ஷுட்டிங்

    மத்திய பிரதேச ஷுட்டிங்

    கடந்த சில நாட்களாக மத்திய பிரதேசத்தில் மகேஷ்வர் பகுதியில் படு சுறுசுறுப்பாக நடந்து வருகிறது. ஐஸ்வர்யா ராய், விக்ரம், த்ரிஷா, ஜெயம் ரவி, கார்த்தி, பிரகாஷ் ராஜ் ஆகியோரை வைத்து இங்கு ஷுட்டிங் நடத்தப்பட்டு வருகிறது.

    நாங்க முடிச்சுட்டோம்

    நாங்க முடிச்சுட்டோம்

    இவர்களில் ஜெயம் ரவி, விக்ரம் இருவரும் பொன்னியின் செல்வன் இரண்டு பாகங்களிலும் தங்களின் போர்ஷனை முடித்து விட்டதாக சமீபத்தில் சோஷியல் மீடியாவில் அறிவித்தனர். இவர்களைத் தொடர்ந்து மற்றவர்களும் தங்கள் போர்ஷனை முடிக்கும் வேலைகளில் இறுதிக்கட்டத்தில் உள்ளனர்.

    புதிதாக முளைத்த சிக்கல்

    புதிதாக முளைத்த சிக்கல்

    ஏற்கனவே அடுத்தடுத்து ஷுட்டிங் ஸ்பாட் ஃபோட்டோக்கள் வெளியாவது நடிகர்களின் கேரக்டர்கள் வெளியாவது ஆகியவை தொடர்ந்து வருவதால் என்ன செய்வதென தெரியாமல் மணிரத்னமும், படக்குழுவும் தலை சுற்றி போய் உள்ளனர். இதற்கிடையில் பொன்னியின் படத்திற்கு மற்றொரு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    இது எப்போ நடந்தது

    இது எப்போ நடந்தது

    லேட்டஸ்ட் தகவலின்படி, ஐதராபாத்தில் பொன்னியின் செல்வன் ஷுட்டிங் நடத்தப்பட்ட போது, குதிரைகளை வைத்து போர் காட்சி ஒன்றை படமாக்கி உள்ளனர். அப்போது நடந்த விபத்தில் எதிர்பாராத விதமாக குதிரை ஒன்று உயிரிழந்துள்ளது. இந்த தகவல் தற்போது தான் வெளியில் கசிந்துள்ளது.

    வழக்கு தொடர்ந்த பெட்டா

    வழக்கு தொடர்ந்த பெட்டா

    இந்த விபத்து பற்றி அறிந்த பெட்டா இந்தியா அமைப்பு, மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் மீது போலீசில் புகார் அளித்ததுடன், வழக்கும் தொடர்ந்துள்ளது. இதைத் தொடர்ந்து இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    விசாரணைக்கு உத்தரவு

    விசாரணைக்கு உத்தரவு

    இதைத் தொடர்ந்து இந்திய விலங்குகள் நல வாரியம், ஐதராபாத் மாவட்ட கலெக்டர் மற்றும் தெலுங்கானா விலங்குகள் நல வாரியத்திற்கும் கடிதம் அனுப்பி, குதிரையின் மரணம் குறித்து விசாரிக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளது. தலையில் காயம் ஏற்பட்டு குதிரை உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

    நீர்ச்சத்தே இல்லை

    நீர்ச்சத்தே இல்லை

    இதற்கிடையில் குதிரையின் உரிமையாளரும், பொன்னியின் செல்வன் படக்குழுவினர் தொடர்ந்து குதிரையை ஷுட்டிங்கிற்காக பயன்படுத்தியதால் அது களைத்து போய், நீர்ச்சத்து இல்லாமல் காணப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

    மணிரத்னம் பெயரும் சேர்ப்பு

    மணிரத்னம் பெயரும் சேர்ப்பு

    படத்தின் டைரக்டர் மற்றும் தயாரிப்பாளர்களில் ஒருவர் என்ற முறையிலும் மணிரத்னத்தின் பெயரும் வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. விலங்குகளை சினிமாக்களில் பயன்படுத்த ஏகப்பட்ட விதிகளை விதித்துள்ளனர். இதனால் தங்களுக்கு சிக்கல் வந்து விடக்கூடாது என்பதற்காகவே விலங்குகள் பயன்படுத்தப்படும் படங்களின் டைட்டில் ஸ்லைடில் எந்த ஒரு விலங்குகளையும் துன்புறுத்தவில்லை என்ற வாசகத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

    பொன்னியின் செல்வனுக்கு சிக்கல்

    பொன்னியின் செல்வனுக்கு சிக்கல்

    ஆனால் மிக பிரம்மாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்டு வரும், அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள பொன்னியின் செல்வன் படத்தின் ஷுட்டிங்கிலேயே குதிரை ஒன்று உயிரிழந்துள்ள சம்பவம் பூதாகரமாக்கப்பட்டு வருகிறது. இந்த விவகாரம் பெரிதாகும் பட்சத்தில் பொன்னியின் செல்வன் படத்திற்கே சிக்கலாக அமையும் என்பதால் படக்குழுவினர் அச்சத்தில் உள்ளனர்.

    English summary
    During the Ponni Selvan shooting in Hyderabad, a battle scene was filmed with horses. One of the horses died unexpectedly in the accident that took place then. This information is currently leaked. Betta India, which came to know about the accident, lodged a complaint with the police against Mani Ratnam's Madras Talkies and the case is continuing.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X