அவளுக்கு சந்தேகம் அதிகம்.. ஐபோன ரோட்ல உடைச்சா.. ஹெலன் மீது குற்றச்சாட்டுக்களை அடுக்கிய பீட்டர் பால்!

சென்னை: வனிதாவுடனான நேர்க்காணலில் பீட்டர் பால் அவரது மனைவி மீது அடுக்கடுக்கான குறறச்சாட்டுக்களை கூறினார்.

தங்களின் திருமணம் விமர்சனத்துக்குள்ளான நிலையில் நடிகை வனிதாவும் அவரது மூன்றாவது கணவரான பீட்டர் பாலும் இணைந்து வீடியோ வெளியிட்டுள்ளனர்.

அதில் தனது முதல் மனைவியான எலிசபெத்தை பிரிந்தற்கான காரணத்தை கூறிய பீட்டர் பால், வனிதாவின் சில கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்பாது ஹெலன் மீது அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை அடுக்கினார்.

என் வேலை உண்டு..

என் வேலை உண்டு..

அவர் பேசியதாவது, நான் உண்டு என் வேலை உண்டு என்று இருப்பேன். பழைசை நினைத்து கவலைப்படுபவன் அல்லது ஃபியூட்சரை நினைத்து மனக்கோட்டையில் வாழ்பவனோ நான் இல்லை. நம்ம ரெண்டு பேருமே ஏற்கனவே ஒரு பாடல் ஷுட்டின் போது ஒரே இடத்திற்கு சென்றிருக்கிறோம். ஆனால் நான் உன்னை அப்போது பார்க்கவில்லை.

சந்தேகம் அதிகம்

சந்தேகம் அதிகம்

என்னை பொம்பள பொறுக்கின்னு சொல்றது எனக்கே சிரிப்பா இருக்கு. அவங்களுக்கு சந்தேகம் அதிகம். நாம சினிமாக்காரங்கள் என்பதால் நமக்கு இரவு 2 மணிக்கு மேல்தான் போன் வரும். அடுத்த நாள் வேலை பற்றி பேச இரவில் தான் பேசுவார்கள். அப்படி ஒரு முறை 2 மணிக்கு மேல் போன் வந்தது, அதுக்குன்னு ஐபோன ரோட்ல போட்டு உடைச்சாங்க.

அங்கெல்லாம் போகல

அங்கெல்லாம் போகல

என் ஸ்டூடியோவ க்ளோஸ் பண்ற லெவல் வந்தப்போ கூட எனக்கு சப்போர்ட் பண்ணல. பணம்தான் வேணும் என்றார். எனக்கு ஆதரவா அவர் இல்ல. அப்போ நான் குடிச்சேன். எனக்கு என் கவலையை சொல்லி அழ ஆள் இல்லை, அதனால் குடித்தேன். ஆனா மறுவாழ்வு மையத்தில் எல்லாம் இல்லை.

மாடியில் இருந்து குதித்தேன்

மாடியில் இருந்து குதித்தேன்

நான் என் அம்மாவுடன் இருந்தபோது தற்கொலை செய்துக்கொள்ள மூன்றாவது மாடியில் இருந்து குதித்தேன் அப்போது ஏற்பட்ட காயம்தான் என் உடம்பில் உள்ள தழும்புகள், நான் கஷ்டப்பட்ட போது அவர் வரவில்லை. அன்று நான் மரணத்தின் விளிம்பில் இருந்தபோதுக்கூட வரவில்லை என்றார் பீட்டர் பால்.

அதை சொல்ல வெட்கப்படுகிறேன்

அதை சொல்ல வெட்கப்படுகிறேன்

இதனை தொடர்ந்து பேசிய வனிதா, பின்னர் என்ன நடந்தது, இருவரும் இந்தளவுக்கு பிரிந்து செல்ல காரணம் என்ன என கேட்க. அதை சொல்லவும் அதற்கு பின்னால் இருந்த அந்த ரகசியத்தை சொல்லவும் நான் வெட்கப்படுகிறேன். அவர் இரண்டு குழந்தைகளுக்கு அம்மா. ஒரு பெண் குழந்தை உள்ளது. ஆகையால் அதை பற்றி நான் பேச விரும்பவில்லை என்றார் பீட்டர் பால்.

பொம்பளையா?

பொம்பளையா?

மேலும் ஒருத்தன் கஷ்டத்துல இருக்கும் போது மரணத்தோட விளிம்புல இருக்கும் போதுக்கூட வந்து எட்டிப்பார்க்காத ஒரு பொம்பளை பொம்பளையா? என்றார். இதைத் தொடர்ந்து பேசிய நடிகை வனிதா, 7 வருஷமா நீங்க பேசிக்கிட்டதே கிடையாதா? 2013 லேருந்து நீங்க அவங்கக்கூட பேசவே இல்லையா? என்று கேட்டார்.

குழந்தையை காட்டினாங்க

குழந்தையை காட்டினாங்க

அதற்கு பதில் அளித்த பீட்டர் பால், ஆமாம் பேசவே இல்லை. எனக்கு அவர் தேவையில்லை. நானாவது அடுத்த பிறந்த நாளுக்காவது என் குழந்தையை பார்க்கனும்னு போய் நான் வாசல்ல நின்றிருக்கிறேன். ஆனா அவர் வரவேவில்லை. என் பெண்ணையே 4, 5 வருஷம் கழிச்சுதான் காட்டினாங்க.

ரோட்டில் நிற்பேன்..

ரோட்டில் நிற்பேன்..

என் மகனுக்கு நான்தான் உன்கூட பேசனும்னு போன் வாங்கிக் கொடுத்தேன். அவனை பார்க்க வேண்டும் என்று தெரு முனையில் நின்று கொண்டு போன் செய்வேன். அவன் வருவான். பாப்பா வரவில்லையா என கேட்பேன், விட மாட்றாங்கப்பா என்பான். உனக்கு என்ன வேண்டுமானாலும் என்னிடம் கேள் என்று கூறினேன்.

கண்கலங்கிய பீட்டர்

கண்கலங்கிய பீட்டர்

என் குழந்தைகளுக்கு என்ன செய்யனுமோ அதையெல்லாம் இன்று வரையும் செய்து கொண்டுதான் இருக்கிறேன். நான் எதுவும் செய்யவில்லை என்று கூறுவதெல்லாம் பொய், என் மகளின் பள்ளி ஆண்டு விழா நிகழ்ச்சிக்கு கூட நான் சென்றிருந்தேன். நான் உள்ளே சென்றால் போய்விடுவார்கள் என எனக்கு தெரிந்த ஒருவரை உள்ளே அனுப்பி வீடியோ எடுக்க வைத்து அதனை வெளியே இருந்து வாட்ஸப்பில் பார்த்தேன் என்று கண்கலங்கினார் பீட்டர் பால்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X