வௌக்கு வச்சு பாத்தாங்களா.. எப்படி அப்படி சொல்லலாம்.. வனிதாவை வச்சு வாங்கிய பீட்டரின் முதல் மனைவி!

சென்னை: கணவர் பீட்டர் பாலுக்கும் தனக்கும் எந்த கனெக்ஷனும் இல்லை என்று வனிதா எப்படி சொல்லலாம் என அவரது முதல் மனைவி ஹெலன் விளாசியிருக்கிறார்.

Recommended Video

'என் வாழ்க்கை இனி சந்தோஷமா வாழ்ந்து காமிப்பேன்'

நடிகை வனிதா கடந்த சனிக்கிழமை தனது காதலரான பீட்டர் பாலை கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்துக் கொண்டார். திருமணத்தில் வனிதா லிப்லாக் முத்தம் கொடுத்ததே பெரும் விமர்சனமானது.

அதனை தொடர்ந்து பீட்டர் பாலின் முதல் மனைவி போலீஸ் புகார், வனிதாவுக்கும் அவருக்குமான வார்த்தை போர் என நாள் தோறும் ஒரு தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

விளாசிய வனிதா

விளாசிய வனிதா

அண்மையில் பீட்டர் பாலின் முதல் மனைவியின் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்கும் வகையில் நடிகை வனிதா தனது யூட்யூப் சேனலில் பேசியிருந்தார். அப்போது பீட்டரின் முதல் மனைவியான ஹெலனை கன்னாபின்னாவென விளாசியிருந்தார்.

இதெல்லாம் கல்ட்சரா?

இதெல்லாம் கல்ட்சரா?

ஏழரை வருடங்களாய் இல்லாமல் இப்போது ஏன் வந்தீர்கள், சாப்பிட்டாரா இல்லையா என்று கேட்கக்கூட ஆள் இல்லை என்றும், பீட்டர் பால் ஒரு டீடோட்லர் என்றும் கடவுள்களுக்கே இரண்டு மனைவி என்றும் இதெல்லாம் கல்ட்சரா என்றும் வெளுத்து வாங்கியிருந்தார் வனிதா.

மருமகளே வா..

மருமகளே வா..

இந்நிலையில் பீட்டர் பாலின் முதல் மனைவியான எலிசபெத் ஹெலன் வனிதாவின் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் வகையில் பேசியிருக்கிறார். அதில் பீட்டர் பாலின் அம்மா வனிதாவை மேடம் என்றுதான் பேசினார்கள்.. பையன கல்யாணம் பண்ணிக்கோ லவ் பண்ணு.. நான் துணையா இருக்கேன் என்றோ மருமகளே வா என்றெல்லாம் பேசவில்லை.

சட்டையை கழட்டி பாருங்க

சட்டையை கழட்டி பாருங்க

பீட்டரை ஒரு டீடோட்லர்னு சொல்றதெல்லாம் பொய். 2 முறை மறுவாழ்வு மையத்திற்கு போய் வந்துள்ளார். அங்கேயிருந்து எஸ்கேப் ஆகும் போது அவரு உடம்பில் காயம் ஏற்பட்டது. யாராவது வேண்டுமானாலும் சட்டையை கழட்டி பார்த்துக்கொள்ளுங்கள் என்றும் கூறினார்.

வனிதாவால் பிரச்சனை

வனிதாவால் பிரச்சனை

வனிதாவால் பீட்டர் மீண்டும் குடிக்க தொடங்கினார். சமீபத்தின் என் மகன் போன் செய்தபோது பாரில் இருப்பதாக கூறினார் பீட்டர். ஏன் மீண்டும் ஆரம்பித்தீர்கள் என்று கேட்டதற்கு வனிதா வீட்ல பிரச்சனை, வனிதாவால் பிரச்சனை என்று போனில் என் மகனிடம் சொன்னார் வனிதா.

எப்படி சொல்லலாம்?

எப்படி சொல்லலாம்?

கடவுளுக்கு ரெண்டு பொண்டாட்டி என்று கூறுகிறாரே வனிதா, அப்போ, நம்ம ரெண்டு பேரும் பொண்டாட்டியா இருக்கலாமா என்று கேட்டுள்ள ஹெலன் எதற்கு கடவுளையெல்லாம் இழுக்கிறார் என்றும் கேட்டுள்ளார். மேலும் தனக்கும் பீட்டருக்கும் எந்த கனெக்ஷனும் இல்லை என்று அவர் எப்படி சொல்லலாம்?

 விளக்கு வைத்தா பார்த்தார்?

விளக்கு வைத்தா பார்த்தார்?

எங்களுக்குள் கனெக்ஷன் இல்லை என்பதை அவர் விளக்கு வைத்தா பார்த்தார் என்றும் விளாசியிருக்கிறார். மேலும் கனெக்ஷன் இல்லாவிட்டால் எப்படி பிப்ரவரி மாதம் எங்களுடன் சேர்ந்து ஃபேமிலி போட்டோ எடுத்திருப்பார் என்றும் சரமாரியாக சாடியிருக்கிறார்.

ஏன் அழைக்கவில்லை

ஏன் அழைக்கவில்லை

பீட்டரின் அம்மாவுக்கு தெரியும், என் மகனுக்கு தெரியும் என்கிறாரே பின்னர் ஏன் திருமணத்திற்கு யாரையும் அழைக்கவில்லை. திருமணத்தில் பீட்டர் சைடில் இருந்து ஏன் யாரும் வரவில்லை என்றும் கேள்வி கனைகளை தொடுத்துள்ளார் ஹெலன். இதற்கெல்லாம் வனிதாவின் பதில் என்னவாக இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்..

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X