எங்க அப்பா ஒன்னும் டீடோட்லர்லாம் இல்ல.. வனிதாவின் 3வது கணவர் குறித்து புட்டுபுட்டு வைக்கும் மகன்!
சென்னை: வனிதாவின் மூன்றாவது கணவரான பீட்டர் பால் குறித்து அவரது முதல் மனைவிக்கு பிறந்த மகன் புட்டு புட்டு வைத்துள்ளார்.
Recommended Video
நடிகை வனிதா விஜயக்குமார் கடந்த சனிக்கிழமை பீட்டர் பால் என்பவரை 40 வயதில் மூன்றாவது திருமணம் செய்துக் கொண்டார். வனிதாவின் வீட்டிலேயே கிறிஸ்தவ முறைப்படி பீட்டர் பாலை திருமணம் செய்து கொண்டார்.
மேலும் லிப்லாக் முத்தமும் கொடுத்துக் கொண்டனர் வனிதாவும் பீட்டர் பாலும். இந்த போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் கழுவி ஊற்றினர்.

முதல் மனைவி புகார்
வயதுக்கு வந்த பெண், கல்லூரி செல்லும் வயதில் மகன் என வைத்துக்கொண்டு லிப் டூ லிப் முத்தம் கொடுப்பதா என கடுமையாக விமர்சித்தனர். இந்நிலையில் திருமணம் முடிந்த மறுநாளே, பீட்டர் பாலின் முதல் மனைவியான எலிசபெத் ஹெலன் வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

மனைவி மீது புகார்
கல்லூரி செல்லும் மகன், பள்ளிக்கு செல்லும் மகள் உள்ள நிலையில், தன்னை விவாகரத்து செய்யாமல் பீட்டர் பால் இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக கூறினார்.
தொடர்ந்து ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த ஹெலன், தனது கணவரான பீட்டர் பால் ஒரு குடிக்காரர் என்றும் பல பெண்களுடன் அவருக்கு தொடர்பு உள்ளது என்றும் குற்றம் சாட்டினார்.

வனிதா பதிலடி
இதன் காரணமாக ஏற்பட்ட பிரச்சனையில் கடந்த ஏழரை ஆண்டுகளாக அவரை பிரிந்து குழந்தைகளுடன் தனியாக வசித்து வருவதாகவும் தெரிவித்தார். இந்நிலையில் தனது யூட்யூப் சேனல் மூலம் பீட்டர் பாலின் முதல் மனைவிக்கு பதிலடி கொடுத்தார் நடிகை வனிதா விஜயக்குமார்.

நான் ஆல்கஹாலிக்
அப்போது தனது கணவரான பீட்டர் பால் ஒரு டீடோட்லர் என்றும் அவர் அசைவம் கூட சாப்பிட மாட்டார் என்றும் சப்பைக்கட்டு கட்டினார். திருமணத்தின் போது ஓபன் செய்யப்பட்ட ஷாம்பெய்ன் பாட்டிலை கூட தான்தான் எடுத்துக்கொண்டதாகவும் பீட்டர் நான் ஆல்கஹாலிக் வொய்ன் தான் குடித்ததாகவும் கூறினார்.

பீட்டரின் மகன் மறுப்பு
மேலும் ஹெலன், பீட்டர் பாலின் பெயரை டேமெஜ் செய்ய வேண்டும் என்பதற்காக பொய்யான குற்றச்சாட்டுக்களை கூறுவதாகவும் தெரிவித்தார். இந்நிலையில் பீட்டர் பாலின் மகன், தனியார் ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார். அதில் பீட்டர் பால் ஒரு டீடோட்லர் என வனிதா கூறியதை மறுத்துள்ளார்.

மறுவாழ்வு மையம்
அவர் பேசியதாவது, குடிக்கு அடிமையான தனது தந்தை ஒரு மறுவாழ்வு மையத்தில் அனுமதிக்கப்பட்டிருந்ததாக தெரிவித்துள்ளர். இதனால் நான்கு, ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு தன்னுடைய குடும்பம், தனது தாய், சகோதரி ஆகிய அனைவரும் தனது தாய்வழி பாட்டியுடன் சென்றுவிட்டதாக தெரிவித்துள்ளார்.

உடம்பில் காயம்
மறுவாழ்வு மையத்தில் இருந்து தனது தந்தை தப்பிக்க முயன்றதாகவும், அப்போது அங்கிருந்த ஒரு சுவரில் ஏறி தனது அப்பா மையத்திலிருந்து தப்பிக்க முயன்றதாகவும் கூறியுள்ளார். அந்த முயற்சியில் அவருக்கு உடம்பில் காயம் ஏற்பட்டது என்றும் கூறியுள்ளார்.

வயிற்றில் வாரிசு
தன்னுடைய அப்பா, தனக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு உள்ளதாகவும், தனது குழந்தை அவரின் வயிற்றில் வளருவதாகவும் கூறினார். இதனை தொடர்ந்து என்னுடைய அம்மா, அவருடன் பேசுவதை நிறுத்தி விட்டார். இந்த சம்பவம் நடந்த போது என் அப்பா என்னிடம் முழு போதையில் இந்த அம்மாவுக்கு பதிலாக ஒரு புதிய ஆன்ட்டியை மாற்றிவிடலாமா என கேட்டார்.

பல பெண்களுடன்
என் அம்மாவிடமும் அதையே திருப்பி திருப்பி கேட்டார். அப்போது தனது தங்கைக்கு இரண்டு வயசுதான் இருக்கும் என்று நினைவு கூர்ந்துள்ளார் பீட்டர் பாலின் மகன். தன்னுடைய அப்பாவுக்கு இந்த அஃபையர் எல்லாம் புதிதல்ல என்ற அவர், வேலை செய்யும் இடமெல்லாம் பல பெண்களுடன் அவருக்கு தொடர்பு இருந்தது என்று கூறியுள்ளார்.

பெண்களும் குடியும் சகஜம்
அவர் எதையாவது மறைக்க வேண்டும் என்றால் வீட்டிற்கு குடித்துவிட்டு வருவார் என்றும் பீட்டர் பாலின் மகன் கூறினார். தனது அப்பாவான பீட்டர் பாலுக்கு பெண்களும் குடியும் சகஜமான ஒன்று என்றும் அவர் நேர்மையற்ற ஒரு மனிதர் என்றும் கூறியுள்ளார் அவரது முதல் மனைவியின் மகன்.


Click it and Unblock the Notifications











