எந்த மூஞ்சிய வச்சுக்கிட்டு இங்க வந்த.. வனிதா அக்காவை அடிக்க பாய்ந்து.. விளாசிவிட்ட பீட்டர் மாமா!

சென்னை: தன்னை மீண்டும் தேடி வந்த வனிதாவை அவரது மூன்றாவது கணவரான பீட்டர் பால் சரமாரியாக விளாசி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகை வனிதா குறித்து மீண்டும் ஒரு செய்தி தீயாய் பரவி வருகிறது. நடிகை வனிதா விஜயக்குமார் கடந்த ஜூன் மாதம் பீட்டர் பால் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

ஏற்கனவே இரண்டு முறை விவாகரத்தான வனிதா, வயதுக்கு வந்த மகளை வைத்துக் கொண்டு 40 வயதில் திருமணம் தேவையா என பலரும் விமர்சித்தனர்.

மீட்டு தர வேண்டும்

மீட்டு தர வேண்டும்

அதோடு பீட்டர் பாலின் முதல் மனைவியும் தன்னுடைய குழந்தைகளுக்கு அப்பா வேண்டும், என்னை விவாகரத்து செய்யாமல் தனது கணவர் வனிதாவை திருமணம் செய்து கொண்டதாக கூறி போலீஸில் புகார் அளித்தார். தனது கணவரை வனிதாவிடம் இருந்து மீட்டு தரவேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

பீட்டர் உத்தமர்

பீட்டர் உத்தமர்

மேலும் பீட்டர் பால் எப்போதும் சரக்கும் கையுமாகவே இருப்பார் என்ற எலிசபெத் பொம்பளை பொறுக்கி என்றும் அவருக்கு பல பெண்களுடன் தொடர்பு உள்ளது என்றும் கூறினார். ஆனால் அவருடைய குற்றச்சாட்டுக்கள் எல்லாம் பொய் என்று கூறிய வனிதா, பீட்டர் பால் மாதிரி ஒரு உத்தமரே இல்லை என்றார்.

கோவா சென்ற வனிதா

கோவா சென்ற வனிதா

பீட்டர் பாலுக்காக பிரபலங்கள் சிலர் உட்பட பலரையும் எதிர்த்தார். இதனால் சமூக வலைதளங்களில் ஹாட் டாப்பிக்கானார். இந்நிலையில் தனது 40வது பிறந்த நாளை கொண்டாட பீட்டர் பால் உட்பட குடும்பத்துடன் கோவா சென்றார் வனிதா.

அடித்து விரட்டிய வனிதா

அடித்து விரட்டிய வனிதா

ஆனால் வரும் வழியில் பீட்டர் பால் குடித்து விட்டு தகராறு செய்ததால் வனிதா அவரை அடித்து விரட்டியதாக தகவல் வெளியானது. இதனை தொடர்ந்து இது தொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டார் வனிதா. அதில் ஹெலன் சொன்னது எல்லாம் உண்மைதான் போல பீட்டர் பால் மீண்டும் குடிக்கு அடிமையாகி விட்டார்.

கடன் வாங்கி குடிக்கிறார்

கடன் வாங்கி குடிக்கிறார்

அவருக்கு என்னைவிட சரக்கும் சிகரெட்டும்தான் முக்கியமாகிவிட்டது. அவரை நம்பி நான் ஏமாந்துவிட்டேன், தோற்றுப் போய்விட்டேன் என கதறல் வீடியோவை வெளியிட்டார். மேலும் பீட்டர் பால் பல இடங்களில் கடன் வாங்கி குடித்துவிட்டு உருண்டு கொண்டிருப்பதாகவும் கூறினார்.

பீட்டரை சந்தித்த வனிதா

பீட்டரை சந்தித்த வனிதா

மேலும் தாங்கள் பிரிந்து விட்டதாகவும் பீட்டரை எலிசபெத் ஹெலனே வைத்துக் கொள்ளட்டும் என்றும் கூறினார். இந்நிலையில் வனிதா குறித்து மேலும் ஹாட்டான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது வனிதா, தனது மூன்றாவது கணவரான பீட்டர் பாலை மீண்டும் சந்தித்ததாக கூறப்படுகிறது.

பீட்டரை தேடிச்சென்ற வனிதா

பீட்டரை தேடிச்சென்ற வனிதா

அதாவது வனிதா வீட்டை விட்டு விரட்டிய பிறகு பீட்டர் பால் அவரது நண்பரின் வீட்டில் தான் தங்கியுள்ளாராம். இந்நிலையில் வனிதாவின் யூடியூப் சேனலை நடத்த யாரும் முன் வரவில்லையாம். அதனால் பீட்டர் பாலை தேடி திரும்பவும் அவரை அழைத்து வர சென்றுள்ளார் வனிதா.

அசிங்கப்படுத்துவீயா?

அசிங்கப்படுத்துவீயா?

ஆனால் வனிதாவை பார்த்த பீட்டர் பால் கடும் கோபமடைந்ததாக தெரிகிறது. வனிதாவிடம் எந்த மூஞ்சிய வச்சுக்கிட்டு இங்க வந்த, உனக்கு வேணும்னா வச்சுப்ப வேண்டாம்னா அசிங்கப்படுத்தி விரட்டி விடுவீயா என கேட்டு சரமாரியாக விளாசியுள்ளார்.

மூஞ்சிலேயே முழிக்காத

மூஞ்சிலேயே முழிக்காத

மேலும் என்னைப் பற்றி தப்பு தப்பா சொல்லி வெளிய தலைகாட்ட முடியாம பண்ணிட்ட.. என்னால எங்கேயுமே போக முடியல.. இப்போ எதுக்கு இங்க வந்த.. உன்ன பாக்கவே புடிக்கல, என் மூஞ்சிலேயே முழிக்காத என்று கூறிவிட்டாராம் பீட்டர்.

அடிக்கப் பாய்ந்த பீட்டர்

அடிக்கப் பாய்ந்த பீட்டர்

அது மட்டுமின்றி உன் குழந்தைகளுக்கு நல்ல அப்பாவா இருக்கலாம் என நினைத்து தான் உன்னை கல்யாணம் செய்தேன். ஆனால் நீ என் பெயரையே கெடுத்து விட்டாயே என வனிதாவை அடிக்க பாய்ந்தாராம் பீட்டார் பால்.

விரைவில் வீடியோ

விரைவில் வீடியோ

வனிதா எவ்ளோவோ சமாதானம் பேசியும், பீட்டர் பால் அசரவே இல்லையாம். இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் வனிதா திரும்பி விட்டதாகவும் கூறப்படுகிறது. இதனை அறிந்த ரசிகர்கள் இதுகுறித்து விரைவில் வனிதா வீடியோ வெளியிட்டாலும் வெளியிடுவார் என்று கூறி வருகின்றனர்.

லிப்லாக் போட்டோ

லிப்லாக் போட்டோ

பீட்டர் பால் வனிதா யூடியூப் சேனலை தொடங்க உதவியாக இருந்தார். விஷுவல் எடிட்டரான பீட்டர் பால் மீது அப்போதுதான் அவருக்கு காதல் ஏற்பட்டது. இதனை தொடர்ந்துதான் இருவரும் கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். லிப்லாக் போட்டோக்களையும் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X