வாழ்வே மாயம் படத்தை போல இருமி இருமி ரத்த வாந்தி.. வனிதா பீட்டர் பாலை பிரிய இதான் காரணமா?
சென்னை: நடிகை வனிதா விஜயக்குமார் திடீரென பீட்டர் பாலை எலிசபெத்துக்கு தாரை வார்க்க அவரது உடல் நிலையில் ஏற்பட்ட பெரும் பின்னடைவே காரணம் என தெரியவந்துள்ளது.
Recommended Video
நடிகை வனிதா விஜயக்குமார் தனது யூடியூப் சேனலுக்கு உதவியாக இருந்த பீட்டர் பால் என்பவரை கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்தார்.
பல சர்ச்சைகளை சந்தித்த நிலையில் வனிதாவின் இந்த திருமண வாழ்க்கை 4 மாதம் கூட முழுதாய் நீடிக்கவில்லை. அதற்குள் அவர்களின் திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்து விட்டது.

தோற்றுப் போய்விட்டேன்
நடுவுல வந்த நான் நடுவுலேயே போய்விடுகிறேன், எலிசபெத்தே அவரது கணவருடன் வாழட்டும் என வீடியோ வெளியிட்டு தனது மூன்றாவது திருமண வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் வனிதா. பீட்டர் பாலை நம்பி ஏமாந்து போய்விட்டதாகவும் தோற்றுவிட்டதாகவும் கண்ணீர் மல்க கூறினார்.

பகீர் தகவல்கைள்
அதோடு பீட்டர் பால் குறித்த பல பகீர் தகவல்களையும் கூறியுள்ளார் வனிதா. அதில் பீட்டர் பால் மீண்டும் போதைக்கு அடிமையாகி விட்டதாகவும் தெரிவித்துள்ளார். தொடர்ந்து புகைப்பிடித்துக் கொண்டே இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

விட முடியவில்லை
வெளியே வேலைக்கு போகும் இடத்தில் ஸ்மோக் பண்ணுவது, குடிப்பது என ஆரம்பித்துவிட்டார். அவரது ரத்தத்தில் ஆல்கஹால் கலந்து இருப்பதால் அவரால் அதை விட முடியவில்லை என்றும் கூறியுள்ளார் வனிதா.

ஐசியுவில் இருந்தார்
மேலும் ஏற்கனவே ஒரு முறை மாரடைப்பு வந்தது. அப்போது மருத்துவமனையில் அனுமதித்து அவருக்கு அவ்ளோ செலவு செய்து மீட்டு விட்டேன். அப்போது ஐசியுவில் இருந்து இரண்டு நாளில் திரும்பி விட்டார்.

தொடர் இருமல்
அதன்பிறகு மீண்டும் அவருக்கு உடல்நிலை மோசமானது. புகைப்பிடிக்கும் பழக்கத்தை விட்டதால் அவருக்கு இருமல் வருகிறது என்று நினைத்தேன். அதனால், இஞ்சி டீ, கஷாயம், மற்றும் அதற்கான மருந்துகளை கொடுத்தேன்.

ரத்தம் ரத்தமாக வாந்தி
ஆனாலும் வெளியே போயிட்டு வருகின்றேன் என்று சொல்லி சிகரெட் பிடித்துக் கொண்டே இருந்தார். இதனால் வாழ்வே மாயம் படத்தில் வருவது போல இருமி இருமி ரத்தமாக கக்கினார். இதனால் மருத்துவமனையில் மீண்டும் சேர்த்து அவருக்கு சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தேன்.

குற்றம்சாட்டுவார்கள்
இது யாருக்கும் பெரிதாக தெரியாது. நான் எவ்ளோவோ எடுத்து சொல்லியும் அவர் குடிப்பழக்கத்தை புகைப் பிடிப்பதையும் விடவில்லை. நாளைக்கு ஏதாவது ஒன்று என்றால் அவரின் குடும்பத்தார் என்னைதான் குற்றம் சொல்வார்கள் என வீடியோவில் தெரிவித்துள்ளார் வனிதா.

மரணத்தின் விளிம்பு
ஏற்கனவே மதுபோதைக்கு அடிமையாகி, மறுவாழ்வு மையத்தில் அனுமதிக்கப்பட்டிருந்தார் பீட்டர் பால். அங்கே இருந்து சுவர் ஏறி குதித்து தப்பிக்க முயன்று, பெரும் காயமடைந்தார். இதனால் மரணத்தின் விளிம்புக்கு சென்று வந்ததாக பீட்டர் பாலே கூறியிருந்தார்.

வனிதாவுக்கு அச்சம்
இந்நிலையில் மீண்டும் குடிப்பழக்கம் மற்றும் புகை பிடிக்கும் பழக்கத்தால் அவரது உடல்நிலையில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. வரும் நாட்களில் அவரது உயிருக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால் என்னவாகும் என்ற அச்சத்திலேயே வனிதா விஜயக்குமார், பீட்டர் பாலை விட்டு விலகியதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











