பிக் பாஸ் மன உளைச்சலை ஏற்படுத்துகிறதா? விளக்கம் கேட்டு.. தகவல் அறியும் உரிமை சட்டத்தில் மனு!

சென்னை: பிக் பாஸ் 7 நிகழ்ச்சி மன உளைச்சலை ஏற்படுத்துகிறதா என கேள்வி கேட்டு தகவல் உரிமை அறியும் சட்டத்தின் கீழ் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அக்டோபர் மாதம் 1ந் தேதி தொடங்கிய இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்பட்ட முதல் நாளில் இருந்தே சுவாரசியத்திற்கு பஞ்சமே இல்லாமல் சென்று கொண்டு இருக்கிறது.

எந்த சீசனிலும் இல்லாமல் இந்த சீசனில் பிரதீப்புக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டதால், கமல்ஹாசனை ரசிகர்கள் வெச்சு செய்தனர்.

Petition under Right to Information Act seeking clarification on whether Bigg Boss show is safe

பிக் பாஸ் சீசன் 7: 20 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது 13 போட்டியாளர்கள் இருக்கின்றனர். கடந்த வாரம்,மிக்ஜாம் புயலால் எலிமினேஷன் இல்லை என்று அறிவிக்கப்பட்ட நிலையில், இந்த வாரம் டபுள் எவிக்ஷன் வேண்டும் என பார்வையாளர்கள் தொடர்ந்து கூறி வருகிறார்கள்.

விதி மீறிய கூல் சுரேஷ்: அதே போல பிக் பாஸ் வீட்டில் இருந்து தப்பிச் செல்ல கூல் சுரேஷ் விதிமீறலுக்காக இந்த வாரம் வெளியேற்றப்படுவார் என நம்பப்படுகிறது. இதையடுத்து, எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்று சொல்லி வார இறுதி நாளில் இல்லை இன்றே ஒரு எவிக்ஷன் இருக்கிறது என்று குண்டை தூக்கிப் போட்டிருக்கிறார் பிக் பாஸ்.

போட்டியாளர்களா? நடிகர்களா? : இப்படி பிக் பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கும் நிலையில், தென்னரசு என்பவர் தகவல் உரிமை அறியும் சட்டத்தின் கீழ் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு எதிராக மனு ஒன்றை கொடுத்திருக்கிறார். அந்த மனுவில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருப்பவர்கள் போட்டியாளர்களா? அல்லது நடிகர்களா? மேலும் இது போட்டி என்றால் அதற்கு அரசு அனுமதி இருக்கிறதா?

தெளிவான பதில் வேண்டும்: மேலும், இந்த போட்டி மன உளைச்சலை தருகிறது. தனிநபரை இப்படி ஒரு நிகழ்ச்சிக்கு உட்படுத்த சட்டத்தில் அனுமதி இருக்கிறதா? உளவியல் ரீதியான கோளாறுகள் வந்தால் என்ன செய்வது? நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் உடுத்தும் உடை அவர்களின் விருப்பமா? அல்லது நிகழ்ச்சி தரப்பிலிருந்து வடிவமைக்கப்பட்டதா?

அதே போன்று போட்டியாளர்களுக்கு மனநிலை சம்பந்தப்பட்ட பிரச்சனை ஏற்பட்டால் மருத்துவ குழு இருக்கிறதா? என அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டுள்ள அவர், பொது மனித நலனை கருத்தில் கொண்டு இந்த கேள்விகளுக்கு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பதில் அளிக்க வேண்டும் என கேட்டுள்ளார்

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X