விஜய்சேதுபதியின் பெட்ரோமாக்ஸுக்கு யு/ஏ சர்ட்டிபிகேட் - அக்டோபர் 11ல் ரிலீஸ்

Recommended Video

Thalapathy64 Update:தளபதி 64 வில்லன் முடிவாயிச்சு

சென்னை: பெட்ரோமாக்ஸ் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று எதிர்பார்த்திருந்த வேளையில், வரும் அக்டோபர் 11ஆம் தேதியன்று இத்திரைப்படம் வெளியாகும் என்று நடிகர் விஜய் சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்த படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக தமன்னா நடித்திருக்கிறார். இந்த திரைப்படத்திற்கு யு/ஏ சென்சார் செர்டிஃபிகேட் கிடைத்துள்ளது.

நடிகை தமன்னா கடைசியாக இயக்குனர் விஜயின் தேவி 2 திரைப்படத்தில் நடிகர் பிரபு தேவாவுடன் இணைந்து நடித்திருந்தார். தற்போது அவர் ஈகில் ஐ புரொடக்ஷன் தயாரிக்கும் பெட்ரோமாக்ஸ் திரைப்படத்தில் நடித்தார்.

Petromax film releases on October 11-Vijay Sethupathi

இந்த திரைப்படத்தை அதே கண்கள் திரைப்படத்தை இயக்கிய ரோஹின் வெங்கடேசன் இயக்கியுள்ளார். மேலும் இந்த திரைப்படத்தில் யோகி பாபு, ராமதாஸ், மன்சூர் அலிகான் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடித்த டி.எஸ்.கே ஆகியோர் நடிக்கின்றனர்.

பெட்ரோமாக்ஸ் என்று பெயரிடப்பட்ட இப்படம் ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்புகளைத் ஏற்படுத்தியுள்ளது. இந்த திரைப்படம் முன்னதாக வெளியான படத்திலிருந்து தனித்துவமான வித்தியாசமான தோற்றத்தில் இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இந்த திரைப்படம் 2017ஆம் ஆண்டில் தெலுங்கில் வந்த ஆனந்தோ பிரம்மா என்ற திரைப்படத்தின் அதிகார பூர்வமான ரீமேக் ஆகும். இந்த திரைப்படத்தை மஹி வி.ராகவ் இயக்கியுள்ளார். ஆனந்தோ பிரம்மா படத்தில் டாப்ஸி நடித்த கதாபாத்திரத்தை தமிழில் தமன்னா ஏற்று நடித்துள்ளார்.

பெட்ரோமாக்ஸ் திரைப்படத்தில் ஆஸ்திரேலிய ஒளிப்பதிவாளர் டான் மேக்கர்த்தூர் பணியாற்றியுள்ளார். இவர் முன்னதாக அச்சம் என்பது மடமையடா திரைப்படத்தில் பணியாற்றியவர். கலை இயக்குனர் வினோத் படத்தின் கலை வடிவமைப்பைக் கையாண்டுள்ளார். இவர் முன்னதாக விக்ரம் வேதா திரைப்படத்தில் பணியாற்றியவர். இந்த திரைப்படத்திற்கு ஜிப்ரான் இசை அமைத்துள்ளார்.

சமீபத்தில் இந்த திரைப்படத்தில் இருந்து மலருது புது நாளே என்ற மெலடி பாடல் வெளியாகி ரசிகர்களின் லைக்குகளை அள்ளிக் குவித்து வருகிறது. இந்த திரைப்படத்திற்கு யு/ஏ சென்சார் செர்டிஃபிகேட் கிடைத்துள்ளது. இதற்கிடையில், நடிகர் விஜய் சேதுபதி இந்த படத்தின் வெளியிட்டு தேதியை அறிவித்துள்ளார். இந்த திரைப்படம் அக்டோபர் 11ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.

வரும் தீபாவளியன்று, முன்னணி நாயகர்களான விஜய் நடித்த பிகில், கார்த்தி நடித்த கைதி திரைப்படங்களோடு பெட்ரோமாக்ஸ் படமும் வெளியாகும் என்று எதிர்பார்த்த நிலையில், அதற்கு முன்பாகவே, அக்டோபர் 11ஆம் தேதியன்று வெளியாவது ரசிகர்களை உற்சாத்தில் ஆழ்த்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X