பெட்ரோமாக்ஸ் நாளை ரிலீஸ் - படக்காட்சியை இணையத்தில் வெளியிட்ட படக்குழு

Recommended Video

Mime Gopi Funny Speech at Petromax Press Meet | Tamannaah | Yogi Babu

சென்னை: முழுக்க முழுக்க ஹாரர் திகில் படமாக உருவாகியுள்ள பெட்ரோமாக்ஸ் படத்தில் தமன்னா நடித்துள்ளார். நாளை வெளியாகவுள்ள இப்படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு காட்சியை படக்குழுவினர் இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர்.

இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் தேவி 2 படத்தில் நடித்ததற்கு பிறகு மற்றுமொரு பேய் படமான பெட்ரோமாக்ஸ் படத்தில் தமன்னா நடித்துள்ளார். இந்த படத்தை இயக்கி உள்ளார் அதே கண்கள் படத்தை இயக்கிய ரோகின் வெங்கடேசன்.

Petromax Movie clip released in Social network

இத்திரைப்படத்தில் ஆஸ்திரேலிய ஒளிப்பதிவாளர் டான் மேக்கர்த்தூர் பணியாற்றியுள்ளார். இவர் முன்னதாக கவுதம் வாசுதேவ மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்த அச்சம் என்பது மடமையடா திரைப்படத்தில் பணியாற்றியவர்.

கலை இயக்குனர் வினோத் படத்தின் கலை வடிவமைப்பைக் கையாண்டுள்ளார். இவர் முன்னதாக விக்ரம் வேதா திரைப்படத்தில் பணியாற்றியவர். இந்த திரைப்படத்திற்கு ஜிப்ரான் இசை அமைத்துள்ளார்.

அதே கண்கள், கலையரசன், ஜனனி, சிவதா, பாலசரவணன் ஆகியோர் நடித்த அந்த படம் ஒரு க்ரைம் திரில்லராக இருந்தது. கண் பார்வையற்ற கலையரசனை ஏமாற்றும் ஷிவதாவை, கண் பார்வை கிடைத்த பின் அவரை எப்படி கண்டு பிடித்தார் என்பதே கதையாகும்.

அதற்கு பிறகு இந்த படத்தை இயக்கி உள்ளார் ரோகின் வெங்கடேசன். இந்த படம் தெலுங்கில் வெளிவந்த அனந்தோ பிரம்மா என்ற படத்தின் அதிகாரபூர்வ ரீமேக் ஆகும். அந்த படத்தில் டாப்ஸி, ஸ்ரீனிவாஸ் ரெட்டி, வெண்ணிலா கிஷோர், போசானி கிருஷ்ன முரளி ஆகியோர் நடித்து இருந்தனர்.

பெட்ரோமாக்ஸ் படம் ஒரு ஹாரர் த்ரில்லர் படம். இந்த படம் நாளை ரிலீஸாக உள்ளது. இதற்கிடையில் படத்தின் ஒரு காட்சி இணையத்தில் படக்குழுவால் ரிலீஸ் செய்யப்பட்டு இருக்கிறது. அதில் ஒரு சிறிய 4 நிமிட ஹாரர் காட்சி வெளியிடப்பட்டிருக்கிறது. தமன்னா உடன் யோகிபாபு, காளி வெங்கட், முனீஸ் காந்த், சத்யன், பேபி மோனிகா, ஸ்ரீஜா, ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். இசை ஜிப்ரான் . ஒளிப்பதிவு டானி ரெய்மான்ட். எடிட்டிங் லியோ ஜான் பால். ஈகிள் ஐ ப்ரோடுக்ஷன் தயாரிக்கின்றனர் இப்படம் வரும் அக்டோபர் 11 ரிலீசாகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X