நாடே எல்லையை நோக்கி பரபரப்பா காத்திட்டிருக்கு.. நீங்க என்னடான்னா கேக் வெட்டிருக்கீங்க கொழந்த
சென்னை: பேட்ட படத்தின் 50வது நாளை கேக் வெட்டி கொண்டாடியுள்ளார் ரஜினிகாந்த்.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, சிம்ரன், த்ரிஷா உள்ளிட்டோர் நடித்த பேட்ட படம் கடந்த ஜனவரி மாதம் 10ம் தேதி வெளியாகி ஹிட்டானது.
பல காலம் கழித்து பழைய ரஜினியை பார்த்த சந்தோஷம் அவரின் ரசிகர்களுக்கு கிடைத்தது.
கொண்டாட்டம்
பேட்ட படத்தின் 50வது நாள் கொண்டாட்டம் அமர்க்களமாக நடந்தது. ரஜினிகாந்த் கேக் வெட்டி கார்த்திக் சுப்புராஜ் மற்றும் படத்தின் இசையமைப்பாளர் அனிருத்துக்கு ஊட்டிவிட்டார்.
கார்த்திக் சுப்புராஜ்
பேட்ட 50வது நாள் கொண்டாட்டத்தையொட்டி கார்த்திக் சுப்புராஜ் மற்றும் அனிருத் ஊர்வலமாக வந்தபோது எடுத்த வீடியோ வெளியாகியுள்ளது.
ரஜினிகாந்த்
பேட்ட படத்தின் 50வது நாள் கொண்டாட்டத்தில் ரஜினி ரசிகர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

விளாசல்
இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் பாகிஸ்தானியர்களிடம் சிக்கி மீண்டு வந்துள்ளார். இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் பதற்றமான சூழல் நிலவும் இந்த நேரத்தில் அது குறித்து பேச நேரம் இல்லாத ரஜினிக்கு கேக் வெட்ட மட்டும் நேரம் இருக்கிறதோ என்ற விமர்சனம் எழுந்துள்ளது.

புதுப்படம்
பேட்ட படத்தை அடுத்து ரஜினிகாந்த் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கிறார். படப்பிடிப்பு இந்த மாதம் துவங்குகிறது. ரஜினி 45 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளார். இந்த படத்திற்கும் அனிருத் தான் இசை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











