6 ஆண்டு காதல் ஜெயித்தது.. பேட்ட படத்தின் பந்தம்..ரஜினிக்கு கல்யாண பத்திரிக்கை வைத்த மேகா ஆகாஷ்!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பேட்ட படத்தில் நடித்து தமிழுக்கு அறிமுகமானவர் நடிகை மேகா ஆகாஷ். இரண்டு தினத்திற்கு முன் தனது இன்ஸ்டாகிராமில் நீண்ட நாள் காதலருடன் நிச்சயம் நடந்ததாக தனது போட்டோக்களை வெளியிட்டு இன்ப அதிர்ச்சி கொடுத்து இருந்தார். அடுத்த மாதம் திருமணம் நடைபெற உள்ளதால், பத்திரிக்கை கொடுக்கும் வேலை மும்முரமாக நடந்து வரும் நிலையில், ரஜினிக்கு திருமண அழைப்பிதழ் கொடுத்துள்ளார்.
சென்னை பெண்ணான மேகா ஆகாஷ், தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். இந்த படத்தைத் தொடர்ந்து சிம்புவுடன் சேர்ந்து வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார். ஆனால், அந்த படம் சுமாராகக்கூட ஓடவில்லை. பின் மேகா ஆகாஷ்-தனுஷ் நடிப்பில் பல நாட்களாக வெளிவராமல் இருந்த, 'என்னை நோக்கி பாயும் தோட்டா'. கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கியிருந்தார். இந்த படத்தின் பாடல்கள் வரவேற்பை பெற்ற அளவிற்கு படம் வரவேற்பை பெறவில்லை. எனினும் மேகா ஆகாஷின் நடிப்பு, இப்படத்தில் பெரிதாக பேசப்பட்டது.

திரைப்படத்தில் மேகா ஆகாஷ்: இவர் தொடர்ந்து படத்தில் நடிக்கவில்லை என்றாலும், சிறிய இடைவேளைவிட்டு படத்தில் நடித்து வந்தார். அந்த வகையில், சந்தானம் நடிப்பில் கடந்த பிப்ரவரியில் வெளியான வடக்குப்பட்டி ராமசாமி படத்தில் நடித்திருந்தார். அதன் பின் விஜய் ஆண்டனி நடிப்பில் விஜய் மில்டன் நடிப்பில் உருவாக மழை பிடிக்காத மனிதன் படத்தில் நடித்திருந்தார். இந்த படம் ஆகஸ்ட் 2 முதல் வெளியானது. ஆனால் படம் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இல்வை.

விரைவில் திருமணம்: இதைத்தொடர்ந்து, சில நாட்களுக்கு முன், தனது திருமணத்தை உறுதி செய்யும் வகையில் நிச்சயதார்த்த போட்டோவை ஷேர் செய்திருந்தார். அதில் தனது நீண்ட நாள் காதலரை கரம்பிடிக்க இருப்பதாக கூறியிருந்த நிலையில், பலரும் இவருக்கு வாழ்த்துதெரிவித்து வந்தனர். இதைத்தொடர்ந்து நடிகை மேகா ஆகாஷின் காதலர் சாய் விஷ்ணு, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய, மாநில அமைச்சருமான திருநாவுக்கரசரின் மகன் என்பது தற்போது தெரியவந்துள்ளது.
காதலுக்கு பச்சைக்கொடி: மேகா ஆகாஷ் மற்றும் சாய் விஷ்ணு இயக்கிய குறும்படத்தில் நடித்த போது, இருவருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. இதைத்தொடர்ந்து இருவரும் ஆறு ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், பெற்றோரிடம் காதலை சொல்லி காதலுக்கு சம்மதம் வாங்கி உள்ளனர். இவர்களின் திருமணம் அடுத்த மாதம் செப்டம்பர் 15ந் தேதி நடைபெற உள்ளது. இந்த திருமணத்திற்காக திருநாவுக்கரசர் மும்முரமாக பத்திரிக்கை கொடுத்து வரும் நிலையில், இன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து திருமண அழைப்பிதழை கொடுத்துள்ளார். இந்த சந்திப்பில் மேகா ஆகாஷ், சாய் விஷ்ணு, திருநாவுக்கரசர் மற்றும் பல குடும்ப உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.



Click it and Unblock the Notifications











