#Petta தமிழகத்தில் 'வேகமாக' ரூ. 100 கோடி வசூல் செய்த படமாம்: சொல்கிறது சன் பிக்சர்ஸ்
சென்னை: பேட்ட படம் தமிழகத்தில் ரூ. 100 கோடி வசூல் செய்துள்ளது என்று சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, சசிகுமார், சிம்ரன், த்ரிஷா உள்ளிட்டோர் நடித்த பேட்ட படம் கடந்த 10ம் தேதி வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் படத்தின் வசூல் குறித்து அதன் தயாரிப்பாளரான சன் பிக்சர்ஸ் முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பேட்ட
பேட்ட படம் தமிழகத்தில் மட்டும் அதுவும் வேகமாக ரூ. 100 கோடி வசூல் செய்த முதல் படம் என்று சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ரஜினி
சன் பிக்சர்ஸின் ட்வீட்டை பார்த்து ரஜினி ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வசூல்
2.0 படம் ரிலீஸான 11 நாட்களில் தமிழகத்தில் மட்டும் ரூ. 150 கோடி வசூல் செய்தது என்று லைகா கூறியது? என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
முதல் தமிழ் படம்
தமிழகத்தில் வேகமாக ரூ. 100 கோடி வசூல் செய்த முதல் தமிழ் படம் பேட்ட என்று சன் பிக்சர்ஸ் கூறியது பொய் என்கிறார்கள் நெட்டிசன்கள்.


Click it and Unblock the Notifications











