இன்னொரு டீ சாப்பிடலாமா?...'பேட்ட' படத்தில் நீக்கப்பட்ட காட்சியை வெளியிட்ட கார்த்திக் சுப்புராஜ்!
சென்னை : கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடித்த பேட்ட திரைப்படம் வெளியாகி இன்றுடன் படம் வெளிவந்து மூன்று ஆண்டுகளை நிறைவு செய்கிறது.
அதை கொண்டாடும் வகையில், அப்படத்திலிருந்து நீக்கப்பட்ட காட்சியை ஒன்றை இன்று கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்டுள்ளார்கள்.
இதை ரஜினிகாந்தின் இணையத்தில் டிரெண்டாக்கி வருகின்றனர்.

பேட்ட
ரஜினிகாந்தின் தீவிரரசிகரான கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான திரைப்படம் தான் பேட்ட. இத்திரைப்படத்தில், விஜய் சேதுபதி, சசிகுமார், சிம்ரன், த்ரிஷா என ஏராளமானோர் நடித்திருந்தனர். இத்திரைப்படத்தில் ரஜினிகாந்த் கிராமத்து கெட் அப், இளமையான தோற்றம், வார்டன் என மாஸ் காட்டி நடித்திருப்பார்.

சூப்பரான திரைப்படம்
சூப்பர் ஸ்டார் என்பது வெறும் வார்த்தை இல்லை என்பதை பேட்ட திரைப்படத்தின் காட்சிக்கு காட்சி நிரூபித்திருந்தார் ரஜினி. பயமறியா சிங்கமாக, படத்தில் எந்த இடத்தில், எந்த நேரத்திற்கு, என்ன வேண்டுமோ அதை மட்டும் கொடுத்து ரசிகர்களை ரசிக்க வைத்திருந்தார். பழைய ரஜினியை பார்க்க ஆசைப்பட்ட ரசிகர்களுக்கு இந்த படம் ஒரு மெகா விருந்தாக அமைந்தது.

3 ஆண்டுகள் நிறைவு
பேட்ட திரைப்படம் 2019ம் ஆண்டு ஜனவரி 10ந் தேதி திரைக்கு வந்த திரைப்படம் இன்றுடன் 3 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இதைக்கொண்டாடும் வகையில் கார்த்திக் சுப்புராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் பேட்ட படத்தில் நீக்கப்பட்ட காட்சி ஒன்றை இன்று வெளியிட்டுள்ளார்கள்.

இன்னொரு டீ சாப்பிடலாமா?
இன்னொரு டீ சாப்பிடலாமா? என்ற தலைப்பில் அந்த காட்சியில் ரஜினி ஹாயாக டீ சாப்பிடுகிறார். ரஜினியின் ரசிகரான கார்த்தி சுப்புராஜ், ரஜினியை எப்படி எல்லாம் பார்க்க எண்ணினார்களோ அப்படியே திரையில் காட்டி இருக்கிறார். தற்போது வெளியாகி உள்ள இந்த டெலிட்டடு காட்சியை ரஜினிகாந்தின் தீவிர ரசிகர்கள் இன்னொரு டீ சாப்பிடலாமா...? என கேட்டு டிரெண்டாக்கி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











