twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பேட்ட இயக்குநருக்கு ஹேப்பி பர்த்டே.. ஷார்ட் ஃபிலிம் டு சினிமா.. கார்த்திக் சுப்புராஜின் ராஜ பாதை!

    |

    சென்னை: இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் 37வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது.

    நாளைய இயக்குநர் நிகழ்ச்சியில் ஷார்ட் ஃபிலிம் இயக்குநராக அறிமுகமான கார்த்திக் சுப்புராஜ், செம ஸ்பீடில் சூப்பர்ஸ்டாரின் பேட்ட படம் வரை இயக்கி, முன்னணி இயக்குநர்கள் லிஸ்டில் இடம்பெற்றுள்ளார்.

    பீட்சா, ஜிகிர்தண்டா, பேட்ட என பிளாக்பஸ்டர் படங்களை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ், தனுஷின் ஜகமே தந்திரம் படத்தின் ரிலீசுக்காக காத்திருக்கிறார்.

    நாளைய இயக்குநர்

    நாளைய இயக்குநர்

    காட்சிப் பிழை எனும் குறும்படத்தை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ், நாளைய இயக்குநர் நிகழ்ச்சிக்கு அதனை அனுப்பி தேர்வானார். தொடர்ந்து, நாளைய இயக்குநர் நிகழ்ச்சியில் பல குறும்படங்களை இயக்கி, மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற கார்த்திக் சுப்புராஜ் அந்த நிகழ்ச்சியின் டைட்டிலை போலவே இயக்குநராக மாறினார்.

    குறைந்த பட்ஜெட்டில்

    குறைந்த பட்ஜெட்டில்

    குறும்பட இயக்குநராக இருந்து சினிமா இயக்குநராக மாறிய கார்த்திக் சுப்புராஜ், குறைந்த பட்ஜெட்டில் எப்படி தரமான படத்தை இயக்கலாம் என்கிற வித்தையை நன்கு கற்று அறிந்தவர். விஜய்சேதுபதி, ரம்யா நம்பீசன் நடிப்பில் லோ பட்ஜெட்டில் அவர் இயக்கிய முதல் படமான பீட்சா, தமிழ் சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தது.

    ஃபேவரைட் நடிகர்

    ஃபேவரைட் நடிகர்

    நாளைய இயக்குநர் முதல் சீசனில் குறும்படங்களில் கவனம் செலுத்திய நடிகர் விஜய்சேதுபதியின் நடிப்பை பார்த்து பிரமித்துப் போன கார்த்திக் சுப்புராஜ், தொடர்ந்து தனது படங்களில் நடிக்க வைத்து வருகிறார். பீட்சா, ஜிகர்தண்டா, இறைவி, பேட்ட உள்ளிட்ட படங்களில் கார்த்திக் சுப்புராஜின் ஃபேவரைட் நடிகரான விஜய்சேதுபதிக்கு முக்கியத்துவம் தந்திருப்பார்.

    தேசிய விருது

    தேசிய விருது

    பீட்சா படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் விஜய்சேதுபதியுடன் இணைந்து அவர் இயக்கிய சூது கவ்வும் திரைப்படம், கார்த்திக் சுப்புராஜை தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத சக்தியாக மாற்றியது. அதனைத் தொடர்ந்து அவர் இயக்கிய ஜிகர்தண்டா படத்திற்கு, இரண்டு தேசிய விருதுகளும், எண்ணற்ற பல விருதுகளும் கிடைத்தன.

    நானே நடிச்சிருப்பேன்

    நானே நடிச்சிருப்பேன்

    ஜிகர்தண்டா படத்தில் நடித்த நடிகர் பாபி சிம்ஹாவுக்கு தேசிய விருது கிடைத்தது. அந்த படத்தை பார்த்து மிரண்டு போன நடிகர் ரஜினிகாந்த், அந்த ரோல் குறித்து, தன்னிடம் முன்பே சொல்லியிருந்தால், "நானே நடிச்சிருப்பேன்" என ரஜினிகாந்த் பாராட்டி இருந்தார். அதன் பலனாக, பேட்ட படத்தை இயக்கும் வாய்ப்பு கார்த்திக் சுப்புராஜுக்கு கிடைத்தது.

    வெயிட்டிங்

    வெயிட்டிங்

    இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் 37வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. ஷார்ட் ஃபிலிம் இயக்குநராக அறிமுகமான கார்த்திக் சுப்புராஜ், செம ஸ்பீடில் சூப்பர்ஸ்டாரின் பேட்ட படம் வரை இயக்கி, முன்னணி இயக்குநர்கள் லிஸ்டில் இடம்பெற்றுள்ளார். பீட்சா, ஜிகிர்தண்டா, பேட்ட என பிளாக்பஸ்டர் படங்களை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ், தனுஷின் ஜகமே தந்திரம் படத்தின் ரிலீசுக்காக காத்திருக்கிறார்.

    English summary
    Petta Director Karthik Subbaraj turns 37 years today. Tamil cinema fans and celebrities send their wishes to Karthik Subbaraj.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X