இந்த பொங்கல் தல பொங்கல் மட்டும் அல்ல பேட்ட பொங்கலும் கூட: போஸ்டர் வெளியிட்ட சன் பிக்சர்ஸ்
Recommended Video

சென்னை: பேட்ட படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது. படம் பொங்கலுக்கு ரிலீஸாக உள்ளது.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி, த்ரிஷா, சிம்ரன் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் பேட்ட. பேட்ட படத்தின் புதிய போஸ்டர் இன்று மதியம் 12. 30 மணிக்கு வெளியாகும் என்று சன் பிக்சர்ஸ் அறிவித்தது.
அறிவித்தபடி 12.30 மணிக்கு போஸ்டரை வெளியிட்டுள்ளது சன் பிக்சர்ஸ்.
ரஜினி
பேட்ட போஸ்டரில் ரஜினியும், சிம்ரனும் சந்தோஷமாக நடந்து வருவது போன்று உள்ளது. மேலும் பேட்ட படம் பொங்கல் ஸ்பெஷலாக ரிலீஸாவதை உறுதி செய்துள்ளது சன் பிக்சர்ஸ்.

சந்தேகம்
பேட்ட படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று கூறப்பட்டது. பின்னர் ஒரு மாத இடைவெளியில் ரஜினி நடித்த இரண்டு படங்கள் வெளியாவதை தயாரிப்பு நிறுவனம் விரும்பவில்லை என்று கூறப்பட்டது. இந்நிலையில் பேட்ட படம் பொங்கலுக்கு வருவது உறுதியாகியுள்ளது.
ரசிகர்கள்
பேட்ட புதிய போஸ்டரில் ரஜினி மிகவும் இளமையாக தெரிகிறார். அவருக்கு வயசே ஆகவில்லை என்கிறார்கள் அவரின் ரசிகர்கள்.
பேட்ட பொங்கல்
பொங்கலுக்கு அஜித்தின் விஸ்வாசம் படம் வெளியாக உள்ளது. இந்த பொங்கல் தல பொங்கல் மட்டும் அல்ல தலைவர் பொங்கலும் கூட.


Click it and Unblock the Notifications











