விஸ்வாசம் ரூ. 100 கோடி, அப்போ பேட்ட?: வசூல் விபரம் இதோ
சென்னை:ரஜினியின் பேட்ட படம் வெளியான மூன்றே நாட்களில் ரூ. 100 கோடி வசூல் செய்துள்ளது.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, சிம்ரன், த்ரிஷா உள்ளிட்டோர் நடித்த பேட்ட படம் கடந்த 10ம் தேதி பிரமாண்டமாக ரிலீஸ் ஆனது.
பேட்ட படம் தமிழகத்தை விட வெளிநாடுகளில் தான் நல்ல வசூல் செய்து கொண்டிருக்கிறது.

பேட்ட
பேட்ட படம் ரிலீஸான மூன்று நாட்களில் உலக அளவில் ரூ. 100 கோடி வசூல் செய்துள்ளது. தமிழகத்தில் பேட்ட படத்துடன் ஒப்பிடும் போது அஜித்தின் விஸ்வாசம் நல்ல வசூல் செய்து கொண்டிருக்கிறது.

சென்னை
சென்னை பாக்ஸ் ஆபீஸில் பேட்ட படம் நேற்று மட்டும் ரூ. 1.29 கோடி வசூலித்துள்ளது. படம் வெளியான மூன்று நாட்களில் சென்னையில் மட்டும் ரூ. 3.49 கோடி வசூல் செய்துள்ளது.

சிங்கப்பூர்
அமெரிக்கா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் பேட்ட படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. பேட்ட படம் சிங்கப்பூரில் 2 நாட்களில் ரூ. 2.02 கோடியும், அமீரகத்தில் ரூ. 4.51 கோடியும் வசூலித்துள்ளது. அமெரிக்காவில் ரூ. 10 கோடி வசூல் செய்துள்ளது.

கனடா
பேட்ட படம் கனாவில் 2 நாட்களில் ரூ. 46 லட்சமும், இங்கிலாந்தில் ரூ. 1.3 கோடியும் வசூலித்துள்ளது. மலேசிய பாக்ஸ் ஆபீஸில் பேட்ட, விஸ்வாசம் ஆகிய படங்கள் வசூல் வேட்டை நடத்திக் கொண்டிருக்கின்றன.


Click it and Unblock the Notifications











