பேட்ட மரண மாஸில் தனுஷ்... ஒரு ரசிகரின் 'கொல வெறி' வீடியோ!
பேட்ட மரண மாஸ் பாடலுக்கு தனுஷ் வெர்ஷன் வீடியோ ஒன்றை ரசிகர் ஒருவர் தயாரித்துள்ளார்.
சென்னை: பேட்ட மரண மாஸ் பாடலில் தனுஷின் காட்சிகளை புகுத்தி செம மாஸாக ஒரு வீடியோ தயார் செய்திருக்கிறார் அவரது ரசிகர் ஒருவர்.
ரஜினியின் பேட்ட படத்தில் வரும் மரண மாஸ் பாடல் பட்டி தொட்டி எங்கும் பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறது. அனிருத் இசையில் வெளிவந்த அந்த பாடல் தான் நேற்றிரவு நடந்த புத்தாண்டு கொண்டாடத்தில் ரிப்பீட்டடாக ஒலித்துக்கொண்டிருந்தது.

2018ம் ஆண்டின் சூப்பர் "ஸ்டார்ஸ்" யாரு.. வாங்க.. ஓட்டுப் போடுங்க! s
இந்தளவுக்கு ஹிட்டான அந்த பாடலுக்கு பலரும் நடனமாடும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் உலவிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் தனுஷ் ரசிகர் ஒருவர் இந்த பாடலை வேறு விதமாக பயன்படுத்தி இருக்கிறார்.
அதாவது இந்த பாடலுக்கு தனுஷின் வெவ்வேறு படங்களின் காட்சிகளை கோர்த்து, பேட்ட மரண மாஸ் - தனுஷ் வெர்ஷன் என்ற பெயரில் ஒரு வீடியோவை உருவாக்கி இருக்கிறார். இந்த வீடியோவை அவர் தனது டிவிட்டர் பக்கத்தி பகிர்ந்துள்ளார்.
இதனை தனுஷ் ரசிகர்கள் அனைவரும் உடனடியாக பகிர்ந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











