அடக்கடவுளே.. சன் பிக்சர்ஸை முந்திக் கொண்டு ‘மரண மாஸ்’ பாடலை வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்!
பேட்ட படத்தின் மரண மாஸ் பாடலை தமிழ் ராக்கர்ஸ் வெளியிட்டுள்ளது.
Recommended Video

சென்னை: ரஜினியின் பேட்ட படத்தின் முதல் பாடலான மரண மாஸ் பாடலை படக்குழுவினருக்கு முன்னதாக தமிழ் ராக்கர்ஸ் வெளியிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள படம் பேட்ட, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் விஜய் சேதுபதி, திரிஷா, சிம்ரன், நவாசுதீன் சித்திக், பாபி சிம்ஹா என ஏராளமானோர் நடித்துள்ளனர்.
அனிருத் இசையில் உருவாகி இருக்கும் இப்படத்தின் முதல் பாடலான மரண மாஸ் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என கடந்த சில நாட்களுக்கு முன்னர் கார்த்திக் சுப்புராஜ் தனது டிவிட்டர் பக்கத்தில் அறிவித்தார்.

மேக்கிங் வீடியோ:
இன்று காலை அப்பாடலின் மேக்கிங் வீடியோ வெளியிடப்பட்டது. அதில் அனிருத் இசையில் இப்பாடல் உருவான விதம் காட்டப்பட்டிருந்தது. இதனால் அப்பாடலைக் கேட்க ரசிகர்கள் ஆர்வமாக காத்திருந்தனர்.

தமிழ் ராக்கர்ஸ்:
இந்நிலையில், படக்குழு அப்பாடலை வெளியிடுவதற்கு முன்னதாக தமிழ் ராக்கர்ஸ் அப்பாடலை இணையத்தில் லீக் செய்துள்ளது. இதனால், படக்குழுவும், ரஜினி ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மிரட்டல்:
சமீபகாலமாக ஒவ்வொரு முன்னணி நடிகர்களின் படங்களையும் ரிலீசுக்கு முன்னதாகவே வெளியிடப் போவதாக தமிழ் ராக்கர்ஸ் மிரட்டி வருகிறது. சொன்னபடியே அவ்வாறு செய்தும் வருகிறது. ஆனால், முதன்முறையாக பாடலையும் படக்குழுவுக்கு முன்னதாக வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது தமிழ் ராக்கர்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

ரசிகர்கள் சந்தேகம்:
முழுப்பாடலையும் தமிழ் ராக்கர்ஸ் வெளியிட்டுள்ளது. இப்பாடலை எஸ்.பி.பி. பாடியிருப்பதாக படக்குழு முன்னதாக அறிவித்திருந்தது. ஆனால், தமிழ் ராக்கர்ஸ் வெளியிட்டுள்ள பாடலைக் கேட்டால், அது எஸ்.பி.பி.யின் வாய்ஸ் போல் இல்லாதது ரஜினி ரசிகர்கள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











